யாழ் தனங்களப்பு கடற்கரைப்பகுதியில் கடந்த ஞாயிறு நண்பகல் கனடா குடியுரிமையுடைய 47 வயதான ஆண் ஒருவர் 2 பெண்களுடன் பொலிசாரிடம் பிடிபட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள கடற்கரைக்கு சமீபமாக பற்றைக்காட்டுப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சொகுசு கார் ஒன்று நிற்பதை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த சிலர், வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பொலிசார் குறித்த காருக்கு அருகில் சென்றுள்ளனர். அதன் போது காரில் இருந்து இறங்கி வந்தவர், தான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் கனடாவில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். சுற்றுலாவுக்காக கடற்கரைக்கு வந்து பொழுது போக்குவதாகக் கூறி பொலிசாரை தனது காருக்கு அருகில் செல்லவிடாது அவர் தடுத்தும் உள்ளார். பொலிசார் காரு்ககு அருகில் சென்று காரை திறந்து பார்த்த போது காரின் பின் சீற்றில் இரு யுவதிகள் இருந்துள்ளார்கள்.
சிறுமிகளின் தோற்றத்துடன் இருந்த அவர்களின் அடையாள அட்டையைப் பரிசோதித்த போது இருவரும் 18 வயதானவர்கள் என்பதுடன் சாவகச்சேரி பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. காரினுள் சந்தேகத்துக்கு இடமான முறையில் எதுவும் காணப்படாததால் கனடா நபரையும் குறித்த மாணவிகள் இருவரையும் பொலிசார் எச்சரிக்கை செய்து அவ்விடத்திலிருந்து துரத்தியதாகத் தெரியவருகின்றது.
0 comments:
Post a Comment