கனடாவில் (Canada) வேலையற்றோர் எண்ணிக்கையில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தகவலை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த மே மாதம் வேலையற்றோர் எண்ணிக்கை 6.2 வீதமாக பதிவாகியுள்ளதுடன், இது கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பீடும் போது 0.1 வீத அதிகரிப்பாகும்.
வேலைவாய்ப்பு அதிகரிப்பு
இதன்போது, மே மாதத்தில் 15 முதல் 24 வயதுடைய இளம் பெண்களுக்கும், 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கும் வேலைவாய்ப்பு அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் வேலைவாய்ப்பு: புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தகவல் | 27 000 New Jobs Canada Interest Rate Central Bank
அத்துடன், மே மாதத்தில் ஒன்டாரியோ, மனிடோபா மற்றும் சஸ்காட்செவன் ஆகிய இடங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
புதிய வேலைவாய்ப்புக்கள்
இதேவேளை, மொத்த வேலை நேரம் மே மாதத்தில் 12 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட 1.6% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
27 000 New Jobs Canada Interest Rate Central Bank
இந்த நிலையில், மே மாதம் கனடிய பொருளாதாரத்தில் 27000 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 4.7% வளர்ச்சியைத் தொடர்ந்து, ஊழியர்களிடையே சராசரி மணிநேர ஊதியம் மே மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 5.1% அதிகரித்துள்ளது.
வட்டி வீதம்
மேலும், வட்டி வீத அதிகரிப்பு காரணமாக தொழிற்சந்தை பலவீனமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், கனடிய மத்திய வங்கி சிறிதளவு வட்டி வீத குறைப்பினை இரண்டு தினங்களுக்கு முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment