யாழ் கண்ணாதிட்டி காளிகோயில் கோபுர கும்பாபிஷேக நிகழ்வில் வந்த அடியார்களின் தாலிகொடி மற்றும் சங்கிலியைத் திருடி கள்ளி ஒரு மணித்தியாலத்திற்குள் பிடிபட்டாள்.இன்று கண்ணாதிட்டி காளி கோயி்ல் கும்பாபிஷேக நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் ஏராளமான அடியவர்கள் கலந்து கொண்ட வேளை நகைகளை கொள்ளையடிக்க வந்தவர்கள் அங்கு புகுந்துள்ளார்கள்.
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் விஷாந்த தலமையில், யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் கண்ணாதிட்டி காளிகோயில் இந்து இளைஞர்களின் ஒத்துழைப்புடன் 27 வயதாக கள்ளி ஒருத்தி பிடிபட்டாள். பொலிஸ் நிலையத்தில் வைத்து அவளை விசாரித்த பொழுது அவளது அந்த ரங்க ஆடைக்குள் இருந்து தாலிகொடி மற்றும் சங்கிலியும் பென்ரனும் மீட்கப்பட்டது.
இவள் கொழும்பு வெல்லம்பிட்டியவை சேரந்தவள் எனவும் வவுனியா பூந்தோட்டத்தில் தற்பொழுது வசிப்பவள் என பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரனைக்காக யாழ்பாண குற்றதடுப்பு பிரிவினரிடம் இவள் ஒப்படைக்கபட்டாள். விசாரனையின் பின் நீதிமன்றில் முற்படுத்தபடுவாள்.
0 comments:
Post a Comment