கிழக்கு லண்டனில் எட்டு வயது சிறுமியை தகாத முறைக்கு இரையாக்கிய நபருக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கிழக்கு லண்டனில் பேலன்ஸ் தெருவை சேர்ந்த 51 வயது முஹம்மது தாலுக்தார் என்பவருகே Snaresbrook கிரவுன் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
1990 களில் கிழக்கு லண்டனில் உள்ள டவர் ஹேம்லெட்ஸில் குறித்த நபர் அப்போது எட்டு வயதேயான சிறுமியை தகாதமுறைக்கு உட்படுத்தியுள்ளார்.
முன்னெடுக்கப்பட்ட விசாரணை
இருப்பினும், 2020 இல் தான் இந்த விவகாரம் வெளிச்சம் கண்டுள்ள நிலையில் இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சாட்சிகளின் மொழி மற்றும் டி.என்.ஏ ஆதாரங்கள் இல்லாமல் அதிகாரிகள் திணரியுள்ளனர்.
இருப்பினும், நம்பிக்கையை கைவிடாத அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நபரின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் மருத்துவ ஆதாரங்களையும் சேகரித்து அப்போது என்ன நடந்தது என்பதை உறுதி செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட பெண் தாம் மேற்கொண்ட உளவியல் ஆலோசனை அமர்வுகளின் குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும் அனுமதி அளித்துள்ளார்.
பெண்ணின் துணிச்சல்
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட தாலுக்தார், தீவிர விசாரணையின் முடிவில் Snaresbrook கிரவுன் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் அவர் குற்றவாளி என்பதை உறுதி செய்ததுடன் இந்த வழக்கு விசாரணையை முன்னெடுத்த அதிகாரி (பால் ஹாவ்தோர்ன்) Paul Hawthorn, இந்த விசாரணை முழுவதும் பாதிக்கப்பட்ட பெண்ணின் துணிச்சலை பாராட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது மட்டுமின்றி, இதுபோன்ற அருவருப்பான செயல்களுக்கு எதிராகப் பேசுவதற்குப் பயப்படக்கூடிய மற்றவர்களுக்கும் இந்த வழக்கு உத்வேகமாக இருக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பாதிக்கப்பட்டவரின் சார்பாக நீதியைப் பெறுவதில் அதிகாரிகள் உண்மையான உறுதியை வெளிப்படுத்தியதுடன் அவர்களின் அர்ப்பணிப்புக்கு அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் தாலுக்தார் மூன்று பலாத்கார குற்றச்சாட்டு மற்றும் நான்கு வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு மே மாதம் 31 ஆம் திகதி Snaresbrook கிரவுன் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment