கனடாவில் (canada) இருந்து புறப்பட்ட ஏர் கனடா விமானம் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் அதன் என்ஜின் வெடித்துச் சிதறி தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.
கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் (Toronto Pearson Airport) இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு 389 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் ஏர் கனடா விமானம் புறப்பட்டுள்ளது.
விமானம் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் அதில் உள்ள என்ஜின் வெடித்துச் சிதறியதுடன் என்ஜின் பகுதியில் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாட்டு
இதையடுத்து விமானிக்கு தகவல் தெரிவித்து உடனே விமானத்தை தரை இறக்குமாறு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவுருத்தியுள்ளனர்.
Engine Of A Canadian Flight Burnt
விமானிகள் உடனடியாக விமானத்தை பத்திரமாக திருப்பி விமான நிலையத்தில் தரையிறக்கியதுடன் அங்கு தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைத்துள்ளனர்.
விமானத்தில் தீ
விமானிகள் சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை உடனே தரை இறக்கியதால் பயணிகள் தப்பியதுடன் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Engine Of A Canadian Flight Burnt
விமானத்தில் தீ பிடித்ததாக தகவல் தெரிந்தததும் பயணிகள் பதற்றம் அடைந்ததுடன் பின்னர் அசம்பாவிதம் ஏற்படாமல் விமானம் தரை இறக்கப்பட்டதால் நிம்மதி அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளன.
மேலும், விமானம் புறப்பட்டதும் அடிப்பகுதியில் தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment