தென்பகுதியில் கொட்டும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.பல இடங்களில் வீதியை குறுக்கறுத்து வெள்ளம் பாய்வதால் அந்த வீதிகளூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதனால் அவர்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். காலிநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நாளையதினம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
விமானம் மூலம் வெளியேற்றப்படும் நோயாளிகள்
இந்த நிலையில் காலி(galle)யில் அமைந்துள்ள நெலுவ வைத்தியசாலைக்கான அனைத்து நுழைவு வீதிகளும் நீரில் மூழ்கியுள்ள நிலையில், நெலுவ வைத்தியசாலையில் அவசர சிகிச்சை தேவைப்படும் அனைத்து கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நோயாளிகளை விமானம் மூலம் உடுகம வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அமில சந்திரசிறி தெரிவித்தார்.
Patients At Neluwa Hospital To Be Airlifted
தயார்நிலையில் சிறிலங்கா கடற்படை மற்றும் இராணுவம்
பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக தவலம, நெலுவ, உடுகம மற்றும் ஹினிதும ஆகிய பகுதிகளில் படகுகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் சிறிலங்கா கடற்படை மற்றும் இராணுவத்தின் நிவாரணக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காலி பதில் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment