நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, June 2, 2024

வெள்ளத்தில் மூழ்கிய அதிவேக நெடுஞ்சாலை...! பொதுமக்களுக்கு வேண்டுகோள் | Expressway Blocked Due To Heavy Rains Colombo


வெள்ளத்தில் மூழ்கிய அதிவேக நெடுஞ்சாலை...! பொதுமக்களுக்கு வேண்டுகோள்
Climate Change Weather Floods In Sri Lanka Expressways in Sri Lanka

அதிவேக நெடுஞ்சாலையின் வெளி சுற்றுவட்ட வீதியின் கடுவலை (Kaduwela) ஊடான பியகம நோக்கிய வீதியின் நுழைவாயில் மூடப்பட்டுள்ளது.

இதன்படி கடவத்தை நோக்கி செல்ல கடுவலை நுழைவாயிலை பயன்படுத்தவோ அல்லது கடவத்தையில் இருந்து வரும் வாகனங்களை கடுவலை நுழைவாயிலை பயன்படுத்தி வெளியேறவோ முடியாது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடும் மழையுடன் பியகம வீதியின் நுழைவாயில் நீரில் மூழ்கியதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதான வீதியின் போக்குவரத்து

கொழும்பு (colombo) - கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து வரக்காபொல பிரதேசத்தில் இருந்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் இவ்வாறு அந்த வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே கொழும்பு - கண்டி வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

0 comments:

Post a Comment