மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05.06.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
மாலை அல்லது இரவில் நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
Today Srilanka Weather Report
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம்
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் சில மாவட்டங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment