This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: Classic Turkish Lucky Evil Eye Bracelets for Men Women Blue Evil Eye Palm Butterfly Pendant Beads Bangles Handmade Charm Jewelry Product Price: Rs.640 Discount Price: Rs.320

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, October 31, 2018

கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி…பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கி தவிக்கும் மஹிந்த


இலங்கை தற்போது அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் ஆட்சியை கொண்டு செல்வதில் புதிய பிரதமர் பாரிய பிரச்சனைக்கு முகங்கொடுத்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சமகாலத்தில் உத்தியோகபூர்வ பிரதமர் யார் என்பது தொடர்பில் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் புதிய அரசாங்கம் உள்ளது.இந்நிலையில் அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளவதில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தோல்வி கண்டுள்ளார்.

நேற்று மாலை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த துமிந்த திஸாநாயக்கவுடன், பசில் ராஜபக்ச சுமார் 3 மணித்தியாலங்கள் கலந்துரையாடல் மேற்கொண்ட போதிலும் அது தோல்வியில் முடிந்துள்ளது.கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க உட்பட குழுவினரின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மஹிந்த தரப்பினர் உள்ளனர்.

அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் பசிலிடம் பல பதில்களை துமிந்த எதிர்பார்த்த போதிலும், உரிய பதில் கிடைக்கவில்லை.விசேடமாக நாடாளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலுக்கு செல்வதென்றால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிடுவீர்களா? அல்லது தாமரை மொட்டில் போட்டியிடுவீர்களா என துமிந்த வினவியுள்ளார்.

எனினும், அதற்கு இன்னமும் தீர்மானிக்கவில்லை என பசில் கூறிய பதிலுக்கு துமிந்த உட்பட குழுவினர் இணங்கவில்லை.இதனால், இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளமையினால் மஹிந்த உட்பட குழுவினர் பாரிய சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 120 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு நிலைக்கு நாடாளுமன்றத்தின் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும் என சர்வதேச நாடுகள் உட்பட பலர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தை எதிர்வரும் 16ம் திகதி வரை கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்தி வைத்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் நாடாளுமன்றம் எப்போது கூடுகிறதோ அன்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் மஹிந்த மற்றும் ரணில் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு பெரும்பான்மையை நிரூபிப்பவர்களே இலங்கையின் உத்தியோகபூர்வ பிரதமர் என அறிவிக்கப்படுவார்.

யாழில் கோர விபத்து...பல்கலை கழக மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!


யாழ்.தெல்லிப்பளை பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பல்கலை கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில் யாழ். பல்கலைகழக முகாமைத்துவ பீட முதலாம் வருட மாணவனான ஊரெழு வடக்கு சுன்னாகத்தை சேர்ந்த அழகராசா புவனநிதர்சன் (22) என்பவரே இவ்வாறு உயிரிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபரிடம் இருந்து பொலிஸார் சாரதி உரிமத்தை கைப்பற்றி உள்ளனர். இந்த உரிமத்தை வைத்தே பொலிஸார் விபத்துக்குள்ளான நபரின் அடையாளத்தை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்த விசாரணையை பொலிஸார் நடத்திவருகின்றனர்.

எரிபொருள் விலை தொடர்பில் மஹிந்த வெளியிட்ட அதிரடி அறிவிப்பு


எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர், அதனை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறைவடையும் போது அதற்கான இலாபத்தை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் எரிபொருள் விலை சூத்திரம் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், இந்த விலைச்சூத்திரத்தின் ஊடாக பொதுமக்களுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்கப் பெறாது, அரசாங்கத்தின் வருவாயினை மேலும் ஈட்டி கொள்வதற்காகவே குறித்த விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் முறையற்ற விதத்தில் அரசாங்கம் அறவிடும் வரிகளுக்கு மேலும் வழு சேர்ப்பதாகவே இது அமைந்துள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிரணி கடும் விமர்சனங்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, October 30, 2018

நாலா பக்கத்திலும் இருந்து கொழும்பிற்குள் படையெடுக்கும் மக்கள்


தமது பலத்தை நிரூபிக்கும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்திருந்தது.

குறித்த போராட்டம் இன்றைய தினம் கொழும்பின் பல இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் இதில் கலந்து கொள்வதற்காக மக்கள் தயாராகி கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அலரி மாளிகையிலும் ஐ.தே.கவின் பெருந்திரளான ஆதரவாளர்கள் திரண்டுள்ளதுடன், போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான தயார் நிலையில் இருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இந்த போராட்டத்திற்காக கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் அனைவரையும் ஒன்றிணையுமாறு பல்வேறு அழைப்புக்கள் ஐ.தே.கவின் ஆதரவாளர்களுக்கு விடுக்கப்பட்டிருந்தன.

மேலும் போராட்டத்தில் 50,000க்கும் அதிகமானோர் கொழும்பில் ஒன்று கூடுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sunday, October 28, 2018

newssle

newssle

ரணிலுக்கு தண்ணீரும் கொடுக்க வேண்டாம்: மைத்திரி அதிரடி உத்தரவு!



அலரி மாளிகைக்கான மின்சாரம், நீர் விநியோகத்தை துண்டிக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவிற்கமைவாகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சட்டரீதியான பிரதமர் யார் என்ற விவாதங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. நானே பிரதமர் என மஹிந்த கூறிவரும் நிலையில், சட்டரீதியான பிரதமர் தானேயென ரணில் கூறிவருகிறார். இதனால் அலரி மாளிகையிலிருந்து ரணில் வெளியேறவில்லை. ரணிலை பாதுகாப்பதற்காக ஐதேக எம்.பிக்கள் மற்றும் பெருமளவான தொண்டர்கள் அலரி மாளிகையில் குழுமியுள்ளனர்.

அலரி மாளிகையை விட்டு ரணில் வெளியேற அரசாங்க தரப்பிலிருந்து சில காலஅவகாசங்கள் வழங்கப்பட்ட போதும், நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபியுங்கள், அலரி மாளிகையை விட்டு வெளியேறுகிறோம் என ஐதேக அறிவித்துள்ளது.


இதேவேளை, 100 இற்கும் அதிகமான எம்.பிக்கள் எழுத்து மூலம் ரணிலுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரணிலின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அவரது பாதுகாப்பு பிரிவில் வெறும் பத்துப் பேரை மாத்திரம் அனுமதிக்கும்படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் அலரி மாளிகையின் தலைமை பொலிஸ் அத்தியட்சகருக்கு நேற்றிரவு இந்த உத்தரவு பறந்துள்ளது.

அத்துடன் அலரி மாளிகைக்கான நீர், மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை! மைத்திரியை எச்சரிக்கும் அமெரிக்கா


சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அனைவரும் செயற்பட வேண்டும் என அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து விலகியிருக்குமாறு அமெரிக்கா, அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசியலமைப்பிற்கு அமைய சபாநாயகருடன் கலந்துரையாடல் மேற்கொண்டு உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கடமைகளுக்கமைய, அரசாங்கத்திற்கு தலைமைத்துவம் வழங்குவது யார் என்பது தொடர்பில் தெரிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவதானம் செலுத்த வேண்டும் என அமெரிக்கா தனது அறிக்கையின் ஊடாக எச்சரித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். இந்நிலையில் இலங்கையில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




மகிந்தவை ஆதரிக்க றிசார்ட்டிடம் பேரம் பேசிய பசில்: 200 கோடியுடன் மகிந்த பக்கம் தாவிய தமிழ் அரசியல்வாதி


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தேர்வு வழங்க முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசார்ட் பதியூதீன் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று காலை 6 மணியளவில் அமைச்சர் றிசார்ட் பதியூதீனை சந்தித்துள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவிகள், இரண்டு பிரதியமைச்சர்கள் பதவிகள் மற்றும் 200 மில்லியன் ரூபாய் பணம் ஆகியவற்றை வழங்குவதாக கூறி பேரம் பேசியதாக கூறப்படுகிறது.

எனினும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க முடியாது என றிசார்ட் பதியூதீன் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை இன்று காலை மற்றுமொரு கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷை இன்று காலை சந்தித்த பசில் ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க 200 மில்லியன் ரூபாயை தருவதாக பேரம் பேசியுள்ளதுடன் அதற்கு சுரேஷ் இணங்கியதாக பேசப்படுகிறது.

இதனடிப்படையிலேயே வடிவேல் சுரேஷ், மகிந்த ராஜபக்சவை இன்று சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில், கொழும்பு அரசியலில் பணம் மற்றும் பதவிகளுக்கான பேரம் பேசல்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

அரசியல் நெருக்கடி! நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை..


கடந்த சில தினங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையையடுத்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி நாட்டு மக்களால் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்களுடைய எதிர்பார்ப்பினை எதிர்காலத்தில் நிறைவேற்றுவேன். 

எந்தக் கட்சியாக இருந்தாலும் நாட்டு மக்களுக்கு சேவை செய்யக்கூடிய கொள்கை தொடர்பிலேயே சிந்திக்க வேண்டும். 

இந்த நாட்டிலேயே எவரும் ஏற்றகாத அரசியல் சவாலை தான் ஏற்றதாகவும், தனது குடும்பமும் அந்த ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த 26 ஆம் திகதி அதனை விட தீர்மானமிக்கதொரு தீர்மானத்தை தான் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டு மக்களை கருத்திற்கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் 2015 ஆம் ஆண்டு எதிர்பார்த்த சீரான அரசியலுக்கு மாறாக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சொகுசு தரப்பினருக்கு தேவையான வகையிலேயே ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டதாகவும் நல்லாட்சி அரசாங்கத்தின் கோட்பாடுகளுக்கு எதிராகவும் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டதாகவும் அதன் பின்னர் நாட்டின் ஊழல் மோசடிகள் அதிகரித்தமையின் காரணமாக நாம் எதிர்பார்த்த கொள்கைகளை நிறைவேற்ற முடியாது போனதாகவும் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்க தனியான தீர்மானங்களை எடுத்தமையினால் அரசியல் பிரச்சினை ஏற்பட்டு அதன் மூலம் பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் இந்த பின்புலத்திலேயே தான் வேறு வழிகள் இல்லாமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து, புதிய அரசாங்கத்தை நியமித்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேபோன்று மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் காரணமக நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய அமைச்சரவை நியமனம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

சபாநாயகரிற்கு சம்பந்தன் கடிதம்



பாரளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா .சம்பந்தன் பாராளுமன்ற சபாநாயகர் கருஜெயசூரியவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

சம்பந்தன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது.

பாராளுமன்றத்தின் ஆதிபத்யத்தை நிலைநிறுத்தவேண்டியதன் அவசியத்தை அங்கீகரிப்பதை கருத்தில்கொண்டும் மக்களால் ஜனநாயகரீதியில் தெரிவு செய்ய்ப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கியுள்ள பாராளுமன்றத்தில் ஆதிபத்யத்தை நிலைநிறுத்தவேண்டியதன் அவசியத்தை கருத்தில்கொண்டும்,பாராளுமன்றம் தனது சட்டபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதன் மூலம் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

கூட்டமைப்பின் நான்கு எம்.பிக்கள் முடிவால் கதி கலங்கும் சம்பந்தன்?


பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். 

அவர் பெரும்பான்மையை நிரூபிக்க போதிய அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, நவம்பர் 16ம் திகதி வரையும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார்.

தற்போதைய நிலையில் மஹிந்த ராஜபக்சவிற்கு, ஐ.தே.கவிலிருந்து பிரிந்து வந்த ஆனந்த அளுக்கமே உள்ளடங்கலாக 100 தொடக்கம் 102 வரையான எம்.பிக்களின் ஆதரவுள்ளது. 

ரவி கருணாநாயக்க தலைமையில் எத்தனை உறுப்பினர்கள் பிரிந்து வருவார்கள் என்பதிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்பதிலுமே, யார் பிரதமர் என்பது தங்கியுள்ளது.

இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வாக்களிப்பு ஒன்று இடம்பெறும் பட்சத்தில் எந்த தரப்பையும் ஆதரிக்காமல்- வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பது குறித்து- தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்கு எம்.பிக்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

அதாவது, கூட்டமைப்பின் முடிவுகள் அனைத்தையும் தாமே எடுத்து, பங்காளிக்கட்சிகள் அதன்படி நடக்க வேண்டுமென்ற கோதாவில் இயங்கிவரும் தமிழரசுக்கட்சி தலைவர்களிற்கு ஒரு அதிர்ச்சி டோஸ் கொடுக்க தயாராகி வருகிறார்கள்.

ரெலோ, புளொட் கட்சிகளின் மூத்த தலைவர்கள் மட்டத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரியவருகிறது. இரண்டு கட்சிகளிலும் தலா இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

“யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான பேச்சில் எம்மையும் இணைக்காமல்- எமக்கு தெரியாமல் பேச்சுக்களை முடித்து விட்டு, ஒரு நபரை குறிப்பிட்டு அவரை ஆதரிக்கும்படி கூட்டமைப்பு தலைமை- தமிழரசுக்கட்சி- சுட்டிக்காட்டினால், இம்முறை அதை ஏற்பதில் சிக்கலிருக்கும்.

2015 ஆட்சி மாற்றத்தின் முன்னதாகவும் இப்படித்தான் நடந்தது. தமிழரசுக்கட்சியின் சில தலைவர்கள் சிங்கப்பூர், சுவிற்சர்லாந்து நாடுகளில் சில சுற்று இரகசிய பேச்சில் ஈடுபட்டனர். அப்போது எமக்கு அதுபற்றி எதுவும் சொல்லப்படவில்லை.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் விவாதிக்கப்படவில்லை. அரசியலமைப்பு பணியொன்று நடந்தது. அது இப்பொழுது முட்டுச்சந்தியொன்றில் சிக்கியுள்ளது.

இந்த பணியில் எமது அனுபவத்தின் அடிப்படையில் இயங்கினால் வேறுவிதமாக இந்த விவகாரத்தை கையாண்டிருப்போம். ஆனால், அரசியலமைப்பு உருவாக்க பணியில் நமது பங்கு இருக்கவில்லை.

ஆனால் அது பூரணப்படுத்தப்படாததன் விளைவை நாமும் ஏற்க வேண்டியுள்ளது. இந்தநிலைமை மீண்டுமொருமுறை வருவதை நாம் விரும்பவில்லை. அதனால், நாம் பங்குபற்றாத எந்த பேச்சின் முடிவையும் ஆதரிக்கலாமா என்பது தொடர்பாக தீவிரமாக யோசித்து வருகிறோம்“ என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த தலைவர் ஒருவர்.

ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இப்பொழுது கனடாவில் தங்கியிருக்கிறார். 

நாடாளுமன்றகுழு ஒன்றுடன், ஏற்கனவே திட்டமிட்ட பயணமாகவே கனடா சென்றிருக்கிறார். ஆனால், மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றபோது, அவர் இலங்கையில் இருந்தார். அதன்பின்னர்தான் கனடா புறப்பட்டு சென்றார்.

நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால அறிவிக்கும்போது, செல்வம் அடைக்கலநாதன் கனடாவில் தங்கியிருந்தார். 

நாடாளுமன்ற பெரும்பான்மையை தீர்மானிக்கும் கூட்டத்தை இந்த நாட்களில் கூட்டியிருந்தால் செல்வம் அடைக்கலநாதன் நிச்சயம் அதில் கலந்துகொண்டிருக்க வாய்ப்பில்லை.

கடந்த சில மாதங்களாகவே ரெலோ, புளொட் அமைப்புக்கள் தமிழரசுக்கட்சியின் ஏகபோக நடவடிக்கைகளால் உள்ளார்ந்த அதிருப்தியுடன் இருந்துவருகிறது.

அண்மையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமயத்திலும், பங்காளி கட்சிகள் இரண்டும் கிட்டத்தட்ட இப்படித்தான் முடிவெடுத்திருந்தன. ஆனால் ரணில் விக்கிரமசிங்க விசயங்களை கையாள்வதில் கில்லாடிதானே.

நம்பிக்கையில்லா பிரேரணை சமயத்தில் பங்காளிகளுடன் நேரில் கதைத்து, தனக்காக வாக்களிக்க வேண்டுமென அழைப்பு விடுத்திருந்தார். 

அதனால் அப்போது தட்ட முடியவில்லை. ஆனால் இம்முறை, இரண்டு கட்சிகளும் கொஞ்சம் உசாராகவே இருப்பதாக தெரிகிறது.

தம்மை பங்காளிகளாக்காமல் எடுக்கும் முடிவுகளிற்கு இனியும் தலையாட்ட மாட்டோம் என பங்காளிகள் எடுத்த தீர்மானம் எடுத்துள்ளனர். 

கொள்கை முடிவுகளில் தம்மை இணைத்துக் கொள்வதில்லையென்ற அவர்களின் முடிவு, நீண்டநாள் அதிருப்தியால் ஏற்பட்டது. 

இந்த அதிருப்திகள் உருவாகிய சமயத்தில், அதற்கு எண்ணெய் வார்ப்பதை போன்ற சம்பவமொன்றும் நடந்தது.

2015 நாடாளுமன்ற தேர்தலின்போது, தேர்தல் செலவாக ஒவ்வொரு கட்சிக்கும் சில இலட்சங்கள் தமிழரசுக்கட்சியால் வழங்கப்பட்டது. 

இந்திய தூதரகம் வழங்கிய பணத்தில் வழங்கப்பட்டது. அப்போது கூட்டமைப்பில் நான்கு கட்சி. ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகளிற்கு அந்த பணம் சென்றது. ஆனால், அதைவிட அதிக பணத்தை தமது கட்சி செலவிற்கு எடுத்துக் கொண்டார்கள்.

தேர்தல் முடிந்ததும் இந்திய தூதரகத்தின் பொறுப்பான அதிகாரியொருவர், அங்கத்துவ கட்சியொன்றின் தலைவரை சந்தித்து பேசும்போது, தேர்தல் பரப்புரையை பற்றியும் பேச்சு வந்தது. 

தேர்தல் செலவுகள் எகிறிக் கொண்டு போவதை பற்றி கட்சி தலைவர் வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.

இதற்காகத்தானே பணம் வழங்குகிறோம் என குறிப்பிட்ட அதிகாரி, வழங்கிய மொத்த தொகையை குறிப்பிட்டிருக்கிறார். 

இதை கேட்ட கட்சி தலைவருக்கு தலை சுற்றாத குறையாம். அள்ளியெடுத்து விட்டு, கிள்ளி கொடுத்திருக்கிறார்களே என்ற கோபத்தில் மற்றைய கட்சிகளின் தலைவர்களிற்கும் விசயத்தை பரிமாறினாராம்.

இந்த கடுப்பு அங்கத்துவ கட்சிகளிற்கு உள்ளது. அதனால்தான், இனி கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட கூட்டங்களிற்கு நாங்களும் வர வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க தயாராகிறார்கள்.

இந்த நிலையை அறிந்த சம்பந்தன் சமரச முயற்சி செய்ய இலங்கையில் உள்ள பங்காளி கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ள பல முயற்சிகள் மேற் கொண்டும் அவை பலனின்றி இருப்பதாக கூறப்படுகிறது. 

மக்கள் நலனிற்காக அல்ல பணத்தை பங்கீடு செய்வது தொடர்பிலான விடயத்திற்காகவே இந்த மூடிவு...

இவர்கள் எல்லாம் தமிழர்களின் தலைவர்கள்...

கொழும்பின் முக்கிய பகுதியில் பதற்றம்! குவிக்கப்படும் பொலிசார்..


தெமடகொட பகுதியிலுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக அங்கு பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கூட்டுத்தாபனத்திற்குள் சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன் அவரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளார்.


குறித்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெமடகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதனால் அப்பகுதியல் பதற்றமான சூழல் இருப்பதாக கூறப்படுகிறது...

ஜனாதிபதிக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்



நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத ஒருவரை பிரதமராக நியமித்து ஜனாதிபதி மேற்கொண்ட ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் செவ்வாய் கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஆயிரக்கணக்கான மக்களை கொழும்புக்கு அழைத்து வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்பட்டுள்ள அரசியல் சதித்திட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு தொந்தரவு கொடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு எதிரான இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம்.

புதிய பிரதமர் நியமிக்கப்பட வேண்டுமாயின் முதலில் அவர் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் முக்கிய இடத்தில் அமைச்சரின் பாதுகாவலர்கள் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு!


கொழும்பு தெமட்டகொட பகுதியில் அமைந்துள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோலிய கூட்டு தாபன தலைமையகத்திற்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜூன ரணத்துங்கவின் பாதுகாவலர்கள் அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதன் போது அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அர்ஜூன ரணத்துங்கவின் பாதுகாவலர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தனை போன்று முட்டாள் தனமான முடிவை எவரும் மேற்கொள்ள மாட்டார்கள் - கருணா


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சாணக்கியமான அரசியல்வாதி எனப் பலராலும் கூறப்பட்டாலும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொண்ட நடவடிக்கை போன்று முட்டாள் தனமான நடவடிக்கையை எவரும் மேற்கொள்ள மாட்டார்கள் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தங்களின் சுகபோக வாழ்விற்காகவும், தங்கள் நலன்களுக்காகவும் பாராளுமன்றத்தைப் பயன்படுத்தாமல் எமது மக்களின் பொதுநலன்களில் அக்கறையுள்ளவர்களாகச் செயற்படுவார்களாக இருந்தால் அவர்களை உண்மையிலேயே நாங்கள் வரைவேற்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில் - 

ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்த நாட்டை முன்னேற்றுவதற்குப் பல வாய்ப்புகள் இருந்தும் அவற்றையெல்லாம் நழுவ விட்டு மஹிந்த குடும்பத்தைப் பலிவாங்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தாரே தவிர இந்த நாட்டை முன்னேற்ற வேண்டும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என நினைக்கவில்லை.

அமெரிக்க டொலரிகன் விலை அதிகரிப்பானது ஒரு நாட்டின் முன்னேறாத நிலையினையே காட்டுகின்றது. பிச்சைக்கார நாடாக மாறுவதற்கான அறிகுறிதான் அது. அத்துடன் மத்திய வங்கிக் கொள்ளை போன்ற பல விடயங்கள் இருக்கின்றன. இன்று அவற்றையெல்லாம் பொறுக்க முடியாமல் தான் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கின்ற வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கின்றன. இந்த வாய்ப்புகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் அவருக்கு ஆதரவை வழங்க முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

ஜனாதிபதிக்கு சபாநாயகர் அனுப்பி வைத்துள்ள விசேட கடிதம்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் சிறப்புரிமைகளை பாதுகாக்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் மற்றுமொரு நபர் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து பிரதமராகும் வரையில் ரணில் விக்ரமசிங்கவின் சிறப்புரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

நாட்டில் பாரியளவிலான அரசியல் மற்றும் அரசியல் சாசன குழப்ப நிலைமையொன்று உருவாகியுள்ளதாகவும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளையும் உறுதி செய்ய வேண்டியது தமது தலையாய கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் சிறப்புரிமைகளை உறுதி செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை ஜனநாயக ரீதியானதும், நியாயமானதுமாகவே தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தலைவர் என்ற ரீதியில் இந்தக் கோரிக்கை குறித்து கவனம் செலுத்துமாறு தாம் வேண்டிக்கொள்வதாக கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பல்வேறு தரப்பினர் ஊடகங்களின் வாயிலாக அச்சுறுத்தல்கள் விடுத்து வரும் ஓர் பின்னணியில் தாம் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 16ம் திகதி வரையில் நாடாளுமன்றை ஒத்தி வைப்பது நாட்டின் மிகப் பாரிய பிரச்சினைகளை உண்டு பண்ணக்கூடிய ஆபத்து நிலைமை காணப்படுகின்றது என்பதனை சுட்டிக்காட்ட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றை ஒத்தி வைப்பது குறித்து சபாநாயகருடன் கலந்தாலோசித்து தீர்மானம் எடுத்திருக்க வேண்டுமென்று கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புகையிரதம் மீது விசமிகள் நடத்திய கல்வீச்சில் நபர் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்!


புகையிரதம் மீது விசமிகள் நடத்திய கல்விச்சின் போது படுகாயங்களுக்கு உள்ளானவர் சிகிச்சை பலனின்றி 60 நாட்களின் பின்னர் இன்று அதிகாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 29 ம் திகதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி மீது, மதவாச்சிப் பகுதியி வைத்து விசமிகள் நடத்திய கல்லெறிந்து தாக்குதலின் போது அதில் பயணித்த யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் சேர்ந்த பாலசிங்கம் சிவச்செல்வம் வயது 64 என்பவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.

ரணில்தான் இலங்கையின் பிரதமர்! அதிரடி அறிவிப்பு!! பெரும் குழப்பம்..


ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக நீடிப்பார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார்.

ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அங்கு யார் பிரதமர் என்ற குழப்பம் உருவாகி உள்ளது.

நீடிக்க உள்ளார் இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிப்பார் என்று அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார். 

நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ராஜபக்சே பதவி ஏற்பை ஏற்றுக் கொள்ள முடியாது சபாநாயகர் அதிரடியாக

நிரூபணம் செய்ய வேண்டும் மேலும் ராஜபக்சே உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும். அவருக்கு எத்தனை எம்பிக்கள் பலம் உள்ளது என்று நிரூபிக்க வேண்டும். ராஜபக்சே தன்னுடைய பலத்தை நிரூபித்தால் மட்டுமே அவரது பதவி ஏற்பை ஏற்றுக்கொள்ள முடியும் என்றுள்ளார்.

யார் நேற்று ராஜபக்சேவிற்கு பிரதமருக்கான அதிகாரம் அனைத்தும் வழங்கப்படுகிறது என்று அதிபர் சிறிசேனா கூறினார். 

இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்குத்தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். 

முடிவெடுக்கும் அதிகாரம், உரிமை அவருக்குத்தான் உள்ளது என்று சபாநாயகர் பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பெரிய குழப்பம் ஏற்கனவே ராஜபக்சே இலங்கையின் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் சபாநாயகரின் புதிய அறிவிப்பால் மேலும் குழப்பம் நீடிக்கிறது. இலங்கையின் பிரதமர் யார் என்று பெரிய குழப்பம் நீடிக்கிறது.

ரணிலுக்கு ஆபத்து? பதறும் முக்கியஸ்தர்கள்...


நாடாளுமன்றின் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதன்படி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் புதிய நபர் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவின் அனுகூலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் கட்சி உள்மட்டத்தில் நடந்த கூட்டத்தினையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றினை சமர்ப்பித்திருந்தனர்.

அதில் உறுப்புரை 42(4) இல் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கேற்ப பாராளுமன்றப் பெரும்பான்மையுடன் நபர் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படும்வரை ரணில் விக்கிரமசிங்கவின் அனுகூலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படவேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதனையடுத்தே சபாநாயகர் ஜனாதிபதிக்கு மேற்படி கடிதத்தினை அனுப்பியுள்ளார்.

இதன்படி, ”நான் இந்த கோரிக்கையை ஒரு ஜனநாயக மற்றும் நியாயமான கோரிக்கையாக கருதுகிறேன். 

ஜனநாயகம் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் ஆணையை பெற்ற அரசாங்கத்தின் தலைவராக, அந்தக் கோரிக்கையை நீங்கள் பரிசீலிக்கும்படி நான் கோருகிறேன்." என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஊடகங்கள் வழியாக பல்வெறுபட்ட நபர்கள் அச்சுறுத்தல்களை வெளிப்படுத்திவருவதாகவும் இது நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துபோயுள்ள தன்மையினைக் காட்டுவதாகவும் சபா நாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன் பல நாடுகள் தமது பிரசைகளுக்கான பயண எச்சரிக்கையினைப் புதுப்பித்துள்ளதாகவும் சபா நாயகர் சுட்டிக்காட்டினார்.

எனவே எதிர்வரும் 16ஆம் நாளன்று பாராளுமன்றில் பிரேரணை நிறைவேற்றும்வரை இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவேண்டும் என கோருவதாக சபாநாயகர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இலங்கை நிலவரம் குறித்து பல மணி நேர மௌனத்தின் பின் இந்தியா கருத்து!


இலங்கையில் ஜனநாயக விழுமியங்கள் மதிக்கப்படவேண்டும் என இந்தியா கருத்து வெளியிட்டுள்ளது.

இலங்கையில் திடீர் அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று பல மணிநேரத்தின் பின்னர் இலங்கை நிலவரம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரவீஸ் குமார் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தியா இலங்கையில் நடைபெறும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நாடு என்ற அடிப்படையிலும் நெருங்கிய அயல்நாடு என்ற அடிப்படையிலும் இலங்கையில் ஜனநாயக விழுமியங்களும் அரசமைப்பு நடைமுறையும் பின்பற்றப்படும் என எதிர்பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களிற்கு எங்களது அபிவிருத்தி உதவிகளை தொடர்ந்தும் வழங்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் விடயத்தில் விசித்திர முடிவெடுத்த பங்காளிக் கட்சிகள்: குழப்பத்தின் த.தே.கூட்டமைப்பு! யாருக்கு ஆதரவு தெரியுமா?



புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திண்டாடி வருகிறார்.

அவர் பெரும்பான்மையை நிரூபிக்க போதிய அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, நவம்பர் 16ம் திகதி வரையும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார்.

தற்போதைய நிலையில் மஹிந்த ராஜபக்சவிற்கு, ஐ.தே.கவிலிருந்து பிரிந்து வந்த ஆனந்த அளுக்கமே உள்ளடங்கலாக 100 தொடக்கம் 102 வரையான எம்.பிக்களின் ஆதரவுள்ளது.

ரவி கருணாநாயக்க தலைமையில் எத்தனை உறுப்பினர்கள் பிரிந்து வருவார்கள் என்பதிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்பதிலுமே, யார் பிரதமர் என்பது தங்கியுள்ளது.

இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

வாக்களிப்பு ஒன்று இடம்பெறும் பட்சத்தில் எந்த தரப்பையும் ஆதரிக்காமல்- வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பது குறித்து- தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்கு எம்.பிக்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

அதாவது, கூட்டமைப்பின் முடிவுகள் அனைத்தையும் தாமே எடுத்து, பங்காளிக்கட்சிகள் அதன்படி நடக்க வேண்டுமென்ற கோதாவில் இயங்கிவரும் தமிழரசுக்கட்சி தலைவர்களிற்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க தயாராகி வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகின்றன.

ரெலோ, புளொட் கட்சிகளின் மூத்த தலைவர்கள் மட்டத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரியவருகிறது. இரண்டு கட்சிகளிலும் தலா இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

"யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான பேச்சில் எம்மையும் இணைக்காமல்- எமக்கு தெரியாமல் பேச்சுக்களை முடித்து விட்டு, ஒரு நபரை குறிப்பிட்டு அவரை ஆதரிக்கும்படி கூட்டமைப்பு தலைமை- தமிழரசுக்கட்சி- சுட்டிக்காட்டினால், இம்முறை அதை ஏற்பதில் சிக்கலிருக்கும்.

2015 ஆட்சி மாற்றத்தின் முன்னதாகவும் இப்படித்தான் நடந்தது. தமிழரசுக்கட்சியின் சில தலைவர்கள் சிங்கப்பூர், சுவிற்சர்லாந்து நாடுகளில் சில சுற்று இரகசிய பேச்சில் ஈடுபட்டனர்.

அப்போது எமக்கு அதுபற்றி எதுவும் சொல்லப்படவில்லை. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் விவாதிக்கப்படவில்லை.

அரசியலமைப்பு பணியொன்று நடந்தது. அது இப்பொழுது முட்டுச்சந்தியொன்றில் சிக்கியுள்ளது. இந்த பணியில் எமது அனுபவத்தின் அடிப்படையில் இயங்கினால் வேறுவிதமாக இந்த விவகாரத்தை கையாண்டிருப்போம்.

ஆனால், அரசியலமைப்பு உருவாக்க பணியில் நமது பங்கு இருக்கவில்லை. ஆனால் அது பூரணப்படுத்தப்படாததன் விளைவை நாமும் ஏற்க வேண்டியுள்ளது. இந்தநிலைமை மீண்டுமொருமுறை வருவதை நாம் விரும்பவில்லை.

அதனால், நாம் பங்குபற்றாத எந்த பேச்சின் முடிவையும் ஆதரிக்கலாமா என்பது தொடர்பாக தீவிரமாக யோசித்து வருகிறோம்" என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த தலைவர் ஒருவர்.

ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இப்பொழுது கனடாவில் தங்கியிருக்கிறார்.

நாடாளுமன்றகுழு ஒன்றுடன், ஏற்கனவே திட்டமிட்ட பயணமாகவே கனடா சென்றிருக்கிறார். ஆனால், மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றபோது, அவர் இலங்கையில் இருந்தார். அதன் பின்னர்தான் கனடா புறப்பட்டு சென்றார்.

நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால அறிவிக்கும்போது, செல்வம் அடைக்கலநாதன் கனடாவில் தங்கியிருந்தார்.

நாடாளுமன்ற பெரும்பான்மையை தீர்மானிக்கும் கூட்டத்தை இந்த நாட்களில் கூட்டியிருந்தால் செல்வம் அடைக்கலநாதன் நிச்சயம் அதில் கலந்துகொண்டிருக்க வாய்ப்பில்லை.

கடந்த சில மாதங்களாகவே ரெலோ, புளொட் அமைப்புக்கள் தமிழரசுக்கட்சியின் ஏகபோக நடவடிக்கைகளால் உள்ளார்ந்த அதிருப்தியுடன் இருப்பதாக அன்மைக்கால தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமயத்திலும், பங்காளி கட்சிகள் இரண்டும் கிட்டத்தட்ட இப்படித்தான் முடிவெடுத்திருந்தன.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க விசயங்களை கையாள்வதில் கில்லாடிதானே.

நம்பிக்கையில்லா பிரேரணை சமயத்தில் பங்காளிகளுடன் நேரில் கதைத்து, தனக்காக வாக்களிக்க வேண்டுமென அழைப்பு விடுத்திருந்தார்.

அதனால் அப்போது தட்ட முடியவில்லை. ஆனால் இம்முறை, இரண்டு கட்சிகளும் கொஞ்சம் உசாராகவே இருப்பதாக தெரிகிறது.

தம்மை பங்காளிகளாக்காமல் எடுக்கும் முடிவுகளிற்கு இனியும் தலையாட்ட மாட்டோம் என பங்காளிகள் எடுத்த தீர்மானம் எடுத்துள்ளனர்.

கொள்கை முடிவுகளில் தம்மை இணைத்துக் கொள்வதில்லையென்ற அவர்களின் முடிவு, நீண்டநாள் அதிருப்தியால் ஏற்பட்டது.

இந்த அதிருப்திகள் உருவாகிய சமயத்தில், அதற்கு எண்ணெய் வார்ப்பதை போன்ற பிரதமர் மாற்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

மைத்திரியின் அதிரடி முடிவுக்கு காரணமாக அமைந்த தொலைபேசி உரையாடல்


கடந்த 26ஆம் திகதி மாலை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னலையில் சத்தியப் பிரமாணம் செய்தமை முழு நாட்டு மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட மகிந்த ராஜபக்ச பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்ய போகிறார் என்ற தகவல் தெரிந்திருக்கவில்லை.

ஜனாதிபதி, தன்னை ஆட்சிக்கு கொண்டு வர பாடுப்பட்டு ஒத்துழைப்புகளை வழங்கிய ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியை கைவிட்டு, மகிந்த ராஜபக்சவிடம் நெருக்கமானது நிகழ்வு ஐக்கிய தேசியக்கட்சியினருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி கிடைத்த மக்களை ஆணை காட்டிக்கொடுத்துள்ளதாக அந்த கட்சி குற்றம் சுமத்தி வருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்படும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நாலக டி சில்வா கடந்த 25ஆம் திகதி மாலை கைதுசெய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைகளில் ஆஜராக வந்திருந்த போது கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நாலக டி சில்வா, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நாலக டி சில்வாவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். சுமார் 30 நிமிடங்கள் இருவரும் உரையாடியதாக கூறப்படுகிறது.

இந்த தொலைபேசி உரையாடலின் பின்னர் ஜனாதிபதி கடும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளதாக பேசப்படுகிறது. நாலக டி சில்வா, மிகவும் முக்கியமான அல்லது இரகசியமான ஏதோ ஒரு தகவலை ஜனாதிபதியிடம் கூறியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அதிகார மற்றத்திற்கு இந்த தொலைபேசி உரையாடலே மிக முக்கியமான காரணமாக இருப்பதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டத்தில் அரசாங்க தரப்பில் சம்பந்தம் இருப்பதாக ஜனாதிபதி அவ்வப்போது மறைமுகமாக குறிப்பிட்டு வந்தார். 

இதனை காரணமாக கொண்டே ஜனாதிபதி, ரணில் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை கைவிட்டு தனது பழைய தலைவரிடம் சென்றதாக கூறப்படுகிறது.

தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டும் தரப்பை நீக்கி விட்டு தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என எண்ணும் தரப்பை தன்னுடன் இணைத்து கொள்வது ஜனாதிபதியின் திட்டமாக இருந்துள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், தான் கூறியதை ஜனாதிபதி மறந்து விட்டதாகவே தோன்றுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் தான் தோற்றுப் போயிருந்தால், பூமிக்கு கீழ் ஆறடியில் புதைக்கப்பட்டிருப்பேன் எனவும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தான் தலைமறைவாக இருந்ததாகவும் உயிர் வாழ்வேன் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கவில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

அன்று அப்படி கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னை ஆறடி குழியில் புதைக்க தருணம் பார்த்து காத்திருந்த நபரை தன்னுடன் இணைத்து கொண்டிருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதிக்கு சபாநாயகர் அனுப்பி வைத்துள்ள விசேட கடிதம்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் சிறப்புரிமைகளை பாதுகாக்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் மற்றுமொரு நபர் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து பிரதமராகும் வரையில் ரணில் விக்ரமசிங்கவின் சிறப்புரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

நாட்டில் பாரியளவிலான அரசியல் மற்றும் அரசியல் சாசன குழப்ப நிலைமையொன்று உருவாகியுள்ளதாகவும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளையும் உறுதி செய்ய வேண்டியது தமது தலையாய கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் சிறப்புரிமைகளை உறுதி செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை ஜனநாயக ரீதியானதும், நியாயமானதுமாகவே தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தலைவர் என்ற ரீதியில் இந்தக் கோரிக்கை குறித்து கவனம் செலுத்துமாறு தாம் வேண்டிக்கொள்வதாக கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பல்வேறு தரப்பினர் ஊடகங்களின் வாயிலாக அச்சுறுத்தல்கள் விடுத்து வரும் ஓர் பின்னணியில் தாம் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 16ம் திகதி வரையில் நாடாளுமன்றை ஒத்தி வைப்பது நாட்டின் மிகப் பாரிய பிரச்சினைகளை உண்டு பண்ணக்கூடிய ஆபத்து நிலைமை காணப்படுகின்றது என்பதனை சுட்டிக்காட்ட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றை ஒத்தி வைப்பது குறித்து சபாநாயகருடன் கலந்தாலோசித்து தீர்மானம் எடுத்திருக்க வேண்டுமென்று கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலி


யாழில் மின்சாரம் தாக்கி பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று யாழ்.வைத்தியசாலை வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இதில் 55 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மகிந்த அரசியலமைப்பு பொறிக்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளாரா? சிலருக்கு சந்தேகம்


பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவின்றி பிரதமராக மகிந்த ராஜபக்ச சத்தியப் பிரமாணம் செய்தமையானது தமக்கு எதிராக வைக்கப்படும் அரசியலமைப்பு ரீதியான பொறி என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மகிந்த ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள மகிந்த ராஜபக்ச, 

பெரும்பான்மை பலத்தை பெற்று தருவதாக பசில் ராஜபக்ச தனக்கு உறுதி வழங்கியிருப்பதாக கூறியுள்ளார்.

பிரதமரை மற்றி ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற விடயத்தை இறுதி வரை விரும்பாத பசில் ராஜபக்ச மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்பது கூட்டு எதிர்க்கட்சியின் குறித்த நாடாளுமன்ற குழுவின் நிலைப்பாடாக இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அரசியல் கைதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! மகிந்த பிரதமாரான பின் அவசர நடவடிக்கை


இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச அண்மையில் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாளைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீண்ட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இது குறித்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார். 

அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து விசேட ஆவணம் ஒன்று தயார் செய்து சட்ட வல்லுனர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இதனையடுத்து அரசியல் கைதிகள் விவகாரம் குறுகிய காலத்தில் திடமான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு துரித விடுதலை தொடா்பில் நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.

உறவினர்கள் பார்க்க வருவதில்லையாம்: யாழ் சிறையில் கைதி தற்கொலை முயற்சி!



யாழ்ப்பாணம் விளக்கமறியல் சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி ஒருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். அவரை ஆபத்தான நிலையில் மீட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இராஜேஸ்வரன் கஜன் ( 3) என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

திருட்டுக் குற்றச்சாட்டில் கடந்த செப்ரெம்பர் மாதம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தன்னைப் பார்ப்பதற்கு உறவினர்கள் எவரும் சிறைச்சாலைக்கு வருவதில்லை என்ற விரக்தியிலேயே அவர் தற்கொலை முயற்சியை மேற்கொண்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமர் மஹிந்தவிற்கு மற்றுமொரு ஐ.தே.க. உறுப்பினர் ஆதரவு!



ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இன்று காலை பிரதமர் மஹிந்தவை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த வடிவேல் சுரேஷ், புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நல்லாட்சி அரசாங்கம் பிளவடைந்து புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்றுள்ள நிலையில், இரு பிரதான கட்சிகளும் பெரும்பான்மையை நிரூபிக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், கட்சி தாவல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அன்றைய தினம் பெரும்பான்மையை நிரூபித்தால் மாத்திரமே புதிய பிரதமர் பதவி செல்லுபடியாகுமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அரசியல் பரபரப்பின் மத்தியில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி


நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை காரணமாக தேநீர் மற்றும் உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, தேநீர் கோப்பையொன்றின் விலை 5 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இன்று முதல் சகல ஹோட்டல்களிலும் 15 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன், கொத்துரொட்டி மற்றும் சோறு பார்சல் உள்ளிட்ட உணவுகளின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தாம் நம்பிக்கையான நிலையில் உள்ளதாகவும், ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீது தமக்கு நம்பிக்கை உள்ளதாகவும், தமது எதிர்பார்ப்புகளை வெளியிடும் வகையில் இந்த விலைகுறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக, உணவக உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

கோதுமை மா மற்றும் சமையல் எரிவாயு விலை அதிகரித்ததை அடுத்து, உணவு பொருட்களின் விலைகளை அதிகரிக்க கடந்த செப்டெம்பர் மாதம் உணவக உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘எனக்கு எந்த பதவியும் வேண்டாம்’: கோத்தபாய ராஜபக்ச அறிவித்தல்!


“எனக்கு எந்தவொரு பதவியும் வேண்டாம். பாதுகாப்பு செயலாளர் பதவியை ஏற்கும்படி பலர் கேட்டுக் கொண்டார்கள்தான். ஆனால் நான் எந்தவொரு பதவியையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை“ என்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில், கோத்தபாய ராஜபக்ஷவுக்கு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி வழங்கப்படப்போவதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையிலேயே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

ராஜபக்ச மீண்டும் தவறு செய்யமாட்டார்: நடிகர் கமல்ஹாசன் கருத்து


இலங்கையின் பிரதமராக ஆகியுள்ள ராஜபக்ச முன்பு செய்த தவறை மீண்டும் செய்யமாட்டார் என நம்புவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இலங்கையில் அதிரடி அரசியல் திருப்பமாக மகிந்த ராஜபக்ச திடீரென பிரதமராக பொறுப்பேற்றார்.

இது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ராஜபக்ச இலங்கை பிரதமரானதை வரவேற்கவில்லை.

இலங்கையில் முன்பு செய்த தவறை ராஜபக்ச செய்யமாட்டார் என நம்புவோம் என கூறியுள்ளார்.

ராஜபக்ச மீண்டும் தவறு செய்யமாட்டார்: நடிகர் கமல்ஹாசன் கருத்து


இலங்கையின் பிரதமராக ஆகியுள்ள ராஜபக்ச முன்பு செய்த தவறை மீண்டும் செய்யமாட்டார் என நம்புவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இலங்கையில் அதிரடி அரசியல் திருப்பமாக மகிந்த ராஜபக்ச திடீரென பிரதமராக பொறுப்பேற்றார்.

இது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ராஜபக்ச இலங்கை பிரதமரானதை வரவேற்கவில்லை.

இலங்கையில் முன்பு செய்த தவறை ராஜபக்ச செய்யமாட்டார் என நம்புவோம் என கூறியுள்ளார்.

கொலை சதித்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி என்னிடம் தெரிவித்தார் – சம்பந்தன்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு உயிராபத்து இருந்ததாக தன்னுடன் கருத்துப் பகிர்ந்துகொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திடீரென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்த்தமைக்கான காரணம் தொடர்பில் தான் வினவியபோதே ஜனாதிபதி குறித்த விடயத்தை குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது ஜனாதிபதிக்கு ஏற்படவிருந்த உயிராபத்து குறித்து மிகவும் உணர்வு பூர்வமாக கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதோடு அதற்கான சாட்சியங்கள் காணப்படுவதாகவும் ஜனாதிபதி கூறியதாக சம்பந்தன் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது, தேசியப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பிலும் தாம் ஜனாதிபதிக்கு மீண்டும் வலியுறுத்தியதாக குறிப்பிட்ட இரா.சம்பந்தன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் கூட்டமைப்பு கொண்டுள்ள கரிசனையையும் அவர் எடுத்துக்கூறியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதியுடன் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதென்றும் அதன்போது தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ்ப் பத்திரிகையாளரை அருகில் வைத்துக்கொண்டு சம்பந்தனுடன் மஹிந்த பேசியது என்ன?


இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்‌ஷ தமது அரசுக்கு ஆதரவு நல்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று பல தடவைகள் தொலைபேசி ஊடாக கோரியிருக்கின்றார்.

நேற்றுக் காலை முதலாவது தொலைபேசி அழைப்பு உரையாடல் இடம்பெற்றபோது மஹிந்தவுக்கு அருகில் தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவரும் இருந்துள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து இந்த முதலாவது தொலைபேசி அழைப்பை சம்பந்தனுக்கு மஹிந்த எடுத்தார்.

காலையில் தனது சாப்பாட்டு மேசையில் தமது மூத்த மகனும் எம்.பியுமான நாமல் ராஜபக்‌ஷ மற்றும் மற்றைய மகனான யோஷித ராஜபக்‌ஷ ஆகியோருடன் காலை உணவாகப் பால் சோறு சாப்பிட்டார் அவர். அச்சமயம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்குக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் மிகவும் பரிச்சயமான தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவரும் அந்தச் சாப்பாட்டு மேசையில் ராஜபக்‌ஷாக்களுடன் இருந்தார்.

அந்தத் தமிழ்ப் பத்திரிகையாளரிடமே சம்பந்தனுடன் தொலைபேசி இணைப்பை ஏற்படுத்தித் தருமாறு மஹிந்த ராஜபக்‌ஷ கோரினார். அந்தப் பத்திரிகையாளரும் தமது தொலைபேசியில் சம்பந்தனுடன் இணைப்பை ஏற்படுத்தி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கொடுத்தார். இருவரும் முதலில் வந்தனங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

பிறகு, பிரதமராகப் பொறுப்பேற்ற மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாழ்த்துக் கூறினார் சம்பந்தன். தொடர்ந்து தமக்குக் கூட்டமைப்பின் ஆதரவைக் கோரினார் மஹிந்த.

“உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் முரண்பாடு, காழ்ப்புணர்ச்சி ஏதும் இல்லை. அரசியல் நிலைப்பாடுகளில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அவ்வளவுதான். நாங்கள் பகையுணர்வு கொண்டவர்கள் அல்லர். நாங்கள் இணைந்து செயலாற்ற முடியும்.

எங்களின் பங்காளிக் கட்சிகளுடன் இது குறித்து விரிவாகப் பேசுவோம். நாங்கள் இணைந்து செயற்படலாமா என்பதைக் காண்டறிந்து உங்களுக்கு ஒரு சாதகமான பதிலைத் தர முடியுமா என்று பார்க்கின்றேன். விரைவில் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்” – என்று பதிலளித்தார் சம்பந்தன்.

இந்த உரையாடல் தமக்குத் திருப்தி தந்ததாக உணவு மேசையில் தம்முடன் அமர்ந்திருந்த தமிழ்ப் பத்திரிகையாளரிடம் தெரிவித்தார் மஹிந்த. சம்பந்தனுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதோடு, மேலதிக விடயங்களை அவ்வப்போது தமக்குத் தெரியப்படுத்துமாறும் அந்த ஊடகவியலாளரைக் கேட்டுக்கொண்டார் மஹிந்த ராஜபக்‌ஷ.

Saturday, October 27, 2018

கொழும்பு அரசியலில் என்ன நடக்கிறது?




1.அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிசியாக உள்ளார்... மஹிந்த மற்றும் பசிலுடன் அடிக்கடி ஆலோசனைகள் பெற்றாலும் இறுதியாக மைத்திரியே எந்தெந்த அமைச்சுக்களுக்கு அமைச்சர்களை நியமிப்பதென தீர்மானம் எடுப்பார்.. 

2.இன்று மாநாயக்க தேரர்களை சந்திக்கும் பிரதமர் மஹிந்த பின்னேரம் கொழும்பு திரும்பியவுடன் ஜனாதிபதியிடம் கலந்து பேசி புதிய அமைச்சரவை தொடர்பில் இறுதி பட்டியலை பார்வையிடுவார்...

3. ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்...

4. முக்கியமான  பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.. அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பது , தோட்டத் தொழிலாளர் சம்பள பிரச்சினை  என்பன இதில் அடக்கம்... முதலாளிமார் சம்மேளனத்தினை நேரடியாக அழைத்து பேச மஹிந்த தீர்மானம் ...

5. தொண்டமான் , டக்ளஸ் தேவானந்தா , ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள்... அரவிந்த்குமார் மற்றும் மலையகத்தில் இருந்து இணையவுள்ள தமிழ் எம் பி ஒருவருக்கு பிரதியமைச்சுப் பொறுப்புக்கள்...

6. அலரி மாளிகையில் இருந்து ரணில் வெளியேற தீர்மானம்... கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளிடம் தனது எதிர்காலத் திட்டம் குறித்து அவர் விபரிப்பு...

7. கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை ஜீ எல் பீரிஸ் சந்திக்க ஏற்பாடு..

8. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்சவை நியமிக்க இன்னமும் தீர்மானம் இல்லை ..

9. நிதியமைச்சின் செயச்செயலாளராக சிரேஷ்ட திறைசேரி அதிகாரி ஆர்ட்டிகலவை நியமிக்க முடிவு...

10. ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டத்தை நாளை முதல் நடத்த யூ என் பி முடிவு..

11. ரவி கருணாநாயக்கவுக்கு நிதியமைச்சை வழங்குவதா வெளிவிவகார அமைச்சை வழங்குவதா என்பதில் இழுபறி... நிதித்துறை நிறுவகங்களை இணைத்து புதிய அமைச்சு ஒன்றை வழங்க உத்தேசம்...

ஜனாதிபதி கொலை சதி ரணிலை கைது செய்ய நடவடிக்கையா..? பரபரப்பாகும் கொழும்பு


முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வதற்கான முன் நகர்வுகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு ஊடகம்ஒன்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கொழும்பு ஊடகத்திற்கு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் கோத்தபாயவை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் பின்னணியில் இந்த கைது இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சதி முயற்சியின் பின்னணியில் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகா இருப்பதாக ஊழல் எதிர்ப்பு முன்னணியின் இயக்குனர் நாமல் குமார குறிப்பிட்டார்.

அவர் வெளியிட்ட கருத்தின் அடிப்படையில் ரணில் கைது செய்யப்படவுள்ளார் என குறித்த பிரபலம் கூறியுள்ளார்.

தனது வீட்டில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி நாமல் குமார இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பாளர்கள் மற்றும் உத்தியோகபூர்வ வாகனம் அவரிடம் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

தன்னை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் பின்னணியில் அதிமுக்கிய பிரபலம் ஒருவர் இருப்பதாகவும் அவரின் பெயரை வெளியிட்டு முழு நாடும் அதிர்ச்சி அடையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரியால் ரணிலுக்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு: பாதுகாப்பில் ஏற்படுத்தப்பட்ட திடீர் மாற்றம்!


அலரி மாளிகையில் தொடர்ந்தும் தங்கியுள்ள ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை உடனடியாக சேவையில் இருந்து மீளப்பெறுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சாதாரண பாதுகாப்பை மாத்திரமே வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

அலரி மாளிகையிலிருந்து இன்று மாலை நான்கு மணிக்கு முன்னதாக வெளியேறும்படி ஜனாதிபதி தரப்பிலிருந்து, ரணிலிற்கு உத்தியோகப்பற்றற்ற முறையில் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், அரசியலமைப்பின்படி தொடர்ந்தும் தானே பிரதமராக இருப்பதாக ரணில் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டு தரப்பிற்குமிடையிலான அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்து வரும் நிலையில் மைத்திரி இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மைத்திரி, ரணிலை தனித்தனியாக சந்திதார் சம்பந்தன்! எதற்கு தெரியுமா?


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தனித்தனியாகச் சந்தித்துள்ளார்.

அத்துடன் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டள்ள மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளார்.

புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகிய பிரதான இரு விடயங்களை முன்னிலைப்படுத்தி கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.

மேலும் கூட்டமைப்பு நபர்களை முன்லைப்படுத்தவில்லை என்பதோடு அரசியலமைப்பு மீறப்படாது பாராளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இறுக்கமான நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும் மூன்று தரப்பினர்களுடனும் சம்பந்தன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

மத்திய அரசாங்கத்தில் நடைபெற்றுள்ள திடீர் மாற்றங்கள் குறித்து கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் வீரகேசரிக்கு பிரத்தியேகமாக கருத்து வெளியிடுகையில், நாட்டின் அரசியலில் தற்பொழுது முக்கியமானதொரு கட்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாம் இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு முற்பட்டபோதும் பாராளுமன்ற அமர்வு வெள்ளிக்கிழமையுடன் நிறைவு அடைந்ததால் எமது கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமது மாவட்டங்களுக்குச் சென்றுவிட்டனர்.

இருப்பினும் நான் அவர்களை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தேன்.

எம்மைப்பொறுத்தவரையில் நாட்டில் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் கூடிய கவனத்தினைக் கொண்டுள்ளதோடு சில முக்கிய கருமங்கள் தொடர்பில் நாம் அதீதமாக அக்கைறையையும் கொண்டிருக்கின்றோம்.

இந்நிலையில், குறிப்பாக பாராளுமன்றம் ஒரு அரசியல் நிர்ணய சபையாக ஏகமனதான அங்கீகாரத்துடன் மாற்றப்பட்டு தேசிய பிரச்சினை உட்பட முக்கிய விடயங்களை உள்ளடக்கிய புதிய அரசியல் சாசனத்தினை உருவாக்கும் செயற்பாடுகள் பல கட்டங்களைக் கடந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின இணை அனுசரணையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆத்தீர்மானத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக சில விடயங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றில் மேலும் முன்னேற்றங்கள் அவசியம் என்பதுடன் அந்தக் கருமங்கள் தடையின்றி தொடர்ச்சியாக தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதும் எமது உறுதியான நிலைப்பாடாகின்றது. ஆகவே இந்த விடயங்களில் முக்கியமான கவனத்தினைக் கொண்டிருக்க வேண்டியுள்ளது.

எம்மைப்பொறுத்தவரையில் நாம் யாரை ஆதரிக்கின்றோம் என்றெல்லாம் நிலைப்பாடெடுக்க தற்போது அவசியம் எற்படவில்லை. நபர்களைப் பற்றிய நாம் அதிகளவில் அக்கறை கொள்ளவில்லை. மேற்படி கருமங்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பது பற்றியே அதிகளவில் கவனத்தினை செலுத்தி ஆராய்ந்து வருகின்றோம். அவ்வாறான நிலையில் இந்த நாட்டில் ஜனநாயத்தினை மீறாது செயற்பட வேண்டும்.

அரசியல் சாசனம் மதிக்கப்பட வேண்டும். அரசியல் சாசனம் பின்பற்றப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. யார் பிரதமர் என்பதை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினத்தவரின் நம்பிக்கையை, ஆதரவை பெற்றவரே பிரதமராகுவதற்கு தகுதியானவராக உள்ளார்.

ஆகவே ஜனநாயகத்திற்கு மாறாக எந்தவிதமான நடவடிக்கைகள் ஊடாகவும் இந்த விடயத்திற்கு தீர்வினை வழங்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளோம். பெரும்பான்மையை நிருபிக்க வேண்டியவர்கள் சார்ந்து எவ்விதமான நிலைப்பாடுகளையும் நாம் எடுக்கவில்லை என்றார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் நடைபெற்ற தனித்தனியான சந்திப்பு தொடர்பாகவும், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான தொலைபேசி உரையாடல் தொடர்பாகவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கருத்துக்களை வெளியிட்டார்.

ஜனாதிபதி மைத்திரி-சம்பந்தன் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், கூட்டமைப்பின் தலைவருக்குமான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதன்போது ஜனநாயகம், பாதுகாக்கப்படுவது உட்பட முக்கிய விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக பாராளுமன்றத்திற்கான மீயுயர் தன்மைக்கு மதிப்பளித்து அரசியலமைப்பினை மீறாத வகையில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுமக்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்றும் சம்பந்தன் ஜனாதிபதியிடத்தில் கேட்டுக்கொண்டதாக தெரியவருகின்றது.

ரணில் - சம்பந்தன் சந்திப்பு

ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று 11.30மணியளவில் நடைபெற்றது. இச்சந்திப்பு தொடர்பாக சம்பந்தன் கூறுகையில்,

ரணில் விக்கிரமசிங்க தமக்கான ஆதரவை நல்குமாறு கோரினார். அச்சமயத்தில், நாம் முன்நிலைப்படுத்தும் இரு பிரதான கருமங்கள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எடுத்துரைத்தேன்.

பாராளுமன்றத்திலேயே இந்த விவாகரம் தீர்க்கப்பட வேண்டும். நாம் இந்த விடயத்தில் நிதானமாக நடப்போம் என்றும் குறிப்பிட்டேன். எந்த செயற்பாடுகளும் அரசியல் சாசனத்தினை மீறதாக வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன் என்றும் குறிப்பிட்டார்.

மஹிந்த-சம்பந்தன் உரையாடல்

இதேவேளை தொலைபேசி ஊடாக புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற உரையாடல் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்திருந்த சம்பந்தன், மஹிந்த ராஜபக்ஷ என்னை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டார்.

என்னுடைய சுகநலம் தொடர்பாக விசாரித்திருந்தார். அதனை அடுத்து அரசியலில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் கூறியதோடு தனது தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவினை நல்குமாறும் கேட்டார்.

அச்சமயத்தில் பதிலளித்த நான், உங்களுக்கு நாம் ஆதரவினை நல்கமாட்டோம் என்று தீர்க்கமாக தீர்மானிக்கவில்லை. நாம் பிரதான இரு கருமங்கள் பற்றி அதீத கவனத்தினைக் கொண்டிருக்கின்றோம்.

ஆரசியலமைப்பு செயற்பாடுகள், ஐ.நா தீர்மானம் மிக முக்கியமானவை என்று குறிப்பிட்டேன். அச்சமயத்தில் என்னை நேரில் சந்தித்து அந்த விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடவிருப்பதாகவும் விரைவில் அந்தச் சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்போது, நாம் தனிப்பட்ட நபருக்காக எந்தவிதமான தீர்மானங்களை எடுத்து ஆதரவளிக்க முடியாது. கொள்கை ரீதியிலேயே ஆதரவளிப்பதற்கான தீர்மானங்களை எடுக்க முடியும். ஆகவே கூடிப்பேசுவோம் என்றேன். அத்துடன் அந்த உரையாடல் நிறைவுக்கு வந்திருந்தது.

இலங்கை தமிழரசுக்கட்சியின்(தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்) 16பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job