கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய உளவுப் படையான "றோ" ஏஜன் ஒருவரை இலங்கை புலனாய்வுத்துறையினர் கைதுசெய்திருந்தார்கள். உடனே இந்திய தூதுவரை அழைத்துப் பேசிய மைத்திரி இது என்ன என்று விளக்கம் தருமாறு கோரிக்கை விடுத்தார். குறித்த நபர் முன் நாள் றோ அதிகாரி தான் ! ஆனால் அவர் 5 வருடங்களுக்கு முன்னரே மன நிலை பாதிக்கப்பட்டதால் றோ அமைப்பில் இருந்து நீக்கப்பட்டார் என்ற சான்றிதழை கொடுத்து கதைக்கு முற்று புள்ளி வைத்தார்கள் இந்திய அதிகாரிகள். ஆனால் இலங்கை அரசின் விசாரணை நீண்டு சென்றது. குறித்த நபர் மைத்திரியையும் , மகிந்த குடும்பத்தையும் போட்டு தள்ளவே இந்தியாவில் இருந்து அனுப்பப் பட்ட விடையம் இலங்கைக்கு தெரியவர...
இலங்கையில் பெரும் மாற்றங்கள் உருவாகியது. இந்திய உளவுப் படையான றோ , மைத்திரியை போட்டு தள்ள ஆள் அனுப்பியது தற்போது ஆதார பூர்வமாக நிரூபனமாகியுள்ளது. மைத்திரி இறந்த பின்னர் "புதிய புலிகள்" என்ற அமைப்பு அதற்கான உரிமையைக் கோர இருந்துள்ளது. ஆனால் அது நடக்கவே இல்லை. இதேவேளை பொலிஸ் மா அதிபர் கைதாகி சிறையில் உள்ளார். அவருக்கும் இன் நிகழ்வுக்கும் மிகுந்த தொடர்பு உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மைதிரி, ஐரோப்பிய ஒன்றியத்தை, பிரித்தானியாவை, அமெரிக்காவை என்று பல நாடுகளை எதிர்த்தும் தான் நினைத்ததை சாதித்துள்ளார்.
இது இலங்கையை பெரும் சங்கடத்தில் கொண்டு போய் விட உள்ளது. தமிழர்கள் இது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையே இல்லை. காரணம் என்னவென்றல் சர்வதேசத்தின் கவனம் தற்போது இலங்கை மேல் திரும்பியுள்ளது. நாளை மறு தினம் பிரித்தானிய வெளியுறவு அமைச்சு, ஈழத் தமிழர்களோடு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளது. மிகவும் ரகசியமாக நடக்கவுள்ள இந்த பேச்சு வார்த்தையில் பல விடையங்கள் அலசி ஆரயப்பட உள்ளது. பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புகள் மீது தற்போது நம்பிக்கை இழந்துள்ள பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம்.
செயல்பாட்டாளர்கள் , தமிழ் புத்திஜீவிகள், தமிழ் ஊடகவியலாளர்களை சந்திக்க உள்ளது.
0 comments:
Post a Comment