* முப்படைகள் மற்றும் பொலிஸ் திணைக்களத்தினை ஜனாதிபதி கையில் எடுக்கலாம்..ஊடக அமைச்சும் கை மாறலாம்..
* நாடாளுமன்றம் அவசரமாகக் கூடலாம்...
* நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பிரதமர் மஹிந்த நிரூபிக்க வேண்டும்...
* ரணில் தனக்கு பெரும்பான்மை இருக்கும் என்றால் அவரும் நிரூபிக்க வேண்டும்..
* பெரும்பான்மையை நிரூபிக்கும் அரசியல் சதுரங்க விளையாட்டை பெசில் ராஜபக்ச ஆரம்பித்துள்ளார்...கட்சிகள் பல தங்களது ஆதரவை யாருக்கு ஆதரவோ அவர்களுக்கு எழுத்து மூலம் உறுதியளிக்க வேண்டும்...
* சபாநாயகர் இதில் எடுக்கும் முடிவை பொறுத்து நாடாளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் ஒரு அதிகார போட்டி வரக் கூடும்...
* ஐக்கிய தேசியக் கட்சியின் பல உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு கொடுக்கலாம்.. அதேபோல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையலாம்...
* எல்லாவற்றுக்கும் மேல் ஒரு முக்கிய விடயம் உள்ளது... அரசியல் நெருக்கடி நீடித்தால் ஜனாதிபதிக்கு எதிராக ஒரு இம்பீச்மெண்ட் - குற்றவியல் பிரேரணை ஒன்றை ரணில் கொண்டுவரலாம்... அப்படி கொண்டு வந்தால் ரணிலுக்கு ஆட்சியமைக்க உதவி வழங்காத தமிழ்க் கூட்டமைப்பு ஜே வீ பீ போன்ற கட்சிகள் கூட அதற்கு ஆதரவளிக்கலாம்.. கணிசமான ஆதரவு அதற்கு இருந்தால் - அதனை விவாதிக்க சபாநாயகர் அனுமதித்தால் நாடாளுமன்றத்தை காலவரையின்றி ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்காது...
* இப்படி ஒரு குற்றவியல் பிரேரணை வந்து நிறைவேறினால் ஜனாதிபதி மஹிந்த பதவிக்கு ஆப்பு வரும்... அப்போது பிரதமர் மஹிந்த ஜனாதிபதியாக மாறலாம்... எனவே மஹிந்த தரப்பு இந்த குற்றவியல் பிரேரணை வரும்போது மௌனம் காக்கலாம்...ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை மஹிந்த தரப்பு அடிக்கக் கூடும்.. மறுபுறம் ஐ தே க தனது வஞ்சத்தையும் தீர்த்துக் கொள்ளலாம்..
* இதற்கும் மேல் அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் விரைவில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல நாடாளுமன்றத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் தீர்மானம் எடுக்கக் கூடும்...
0 comments:
Post a Comment