பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஆதரவு கோரியுள்ளனர்.
குறித்த இருவரும் தொலைபேசியில் தம்மைத் தொடர்பு கொண்டு ஆதரவைக் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பரிசீலிக்கப்படும் என அவர்களிடம் கூறியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
இதேநேரம், தனிப்பட்ட நபர் யார் என்பது முக்கியமல்ல என்றும், கொள்கைகளே முக்கியம் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டார்.
இதற்கமைய, உரிய நேர்ததில் எடுக்கவேண்டிய நேரத்தில் எடுக்கவேண்டிய தீர்மானங்களை மேற்கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்றைய தினம் தமது கட்சித் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் சந்தித்தபோது, கட்சியின் ஆதரவை வெளிப்படுத்தினார் என்றும் அவர் எமது செய்திச் சேவையிடம் குறிப்பிட்டார்.
இதேநேரம், ஈழமக்கள் ஜனநாயக கட்சி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக அதன் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
குறுந்தகவல் ஒன்றின் ஊடாக அவர் எமது செய்திப் பிரிவிடம் இதனை உறுதிப்படுத்தினார்.
0 comments:
Post a Comment