ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாளை காலை எட்டு மணி வரையில் காலக்கெடு வழங்கப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தற்பொழுது நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உரிய முறையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியை துறந்து செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சரியான முறையில் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். ஆகவே ரணிலின் பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு வாயை மூடிக் கொண்டு அலரி மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச தோல்வியை தழுவிய போது மிகுந்த கௌரவரத்துடன் விடிய முன்னரே அலரி மாளிகையை விட்டுச் சென்றிருந்தார்.
எனவே மரியாதையுடன் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையை விட்டு வெளியேறிச் செல்ல வேண்டுமென விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று 4 மணிக்கு அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டுமென ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்கப்பட்டள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் செயலாளராக எஸ்.அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment