இலங்கைக்கான சீன தூதுவர் ஷேன் சுவேன் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்றிரவு (27) அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, நாட்டில் தற்போது நிலவும் பதற்றமான அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பின் பின்னர் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் விசேட சந்திப்பொன்றையும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடாத்தியுள்ளார். இதில் 8 நாடுகளில் இராஜதந்திரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment