நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை காரணமாக தேநீர் மற்றும் உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, தேநீர் கோப்பையொன்றின் விலை 5 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இன்று முதல் சகல ஹோட்டல்களிலும் 15 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன், கொத்துரொட்டி மற்றும் சோறு பார்சல் உள்ளிட்ட உணவுகளின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தாம் நம்பிக்கையான நிலையில் உள்ளதாகவும், ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீது தமக்கு நம்பிக்கை உள்ளதாகவும், தமது எதிர்பார்ப்புகளை வெளியிடும் வகையில் இந்த விலைகுறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக, உணவக உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
கோதுமை மா மற்றும் சமையல் எரிவாயு விலை அதிகரித்ததை அடுத்து, உணவு பொருட்களின் விலைகளை அதிகரிக்க கடந்த செப்டெம்பர் மாதம் உணவக உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment