நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, October 27, 2018

மகிந்தவின் அதிரடி அரசியல் பிரவேசத்தால் பறிபோகவுள்ள மைத்திரியின் பதவி?


இலங்கை அரசியல் வரலாற்றில் நேற்று இடம் பெற்ற அரசியல் மாற்றம் நாட்டில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பதவி நீக்குவதற்காக பெருங்குற்றச்சாட்டுப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதியை பதிவி நீக்கம் செய்வதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகின்றது.

பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை, பதவியிலிருந்து நீக்கி, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ஸவை நியமித்தமை, நாட்டின் அரசியலமைப்புக்கு முரணானது என கூறியே இந்த பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து பதவி விலகியதன் ஊடாக, அரசியலமைப்பின் 48ஆவது பிரிவின் முதலாவது சரத்திற்கு அமைய பிரதமர் பதவி வெற்றிடமாகியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment