உலக அரசியல் வரலாற்றில் மோசமான காட்டிகொடுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்ய வேண்டாம் என அமைச்சர் ராஜித்த சேனாரத்தன தெரிவித்துள்ளார்.அவருடைய நன்மதிப்பை கெடுத்துகொள்ள வேண்டாம் என அவருடைய நண்பன் என்ற வகையில் தெரிவித்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது போன்ற தீர்மானத்தை எடுப்பார் என நாம் நினைக்கவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தால் ஆறடி குழிக்குள் தன்னை அனுப்புவதாக கூறிய நபரை தற்போது மைத்திரிபால சிறிசேன பிரதமராக்கியுள்ளார்.
இதன் மூலம், அவருடைய நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது. உயிரை பணயம் வைத்து மைத்திரிபால சிறிசேனவை நாம் ஜனாதிபதியாக்கினோம். ஆனால் அதனை மறந்து மோசடிக்காரர்களுடன் கூட்டு சேந்துள்ளார்.எனவே, அரசியல் வரலாற்றில் மோசமான காட்டிகொடுப்பை ஜனாதிபதி செய்யக் கூடாது. இதேவேளை பாராளுமன்றத்தை ஒத்திவைத்து மக்களின் ஜனநாயக உரிமையை கேள்விகுறியாக்க வேண்டாம்.
நாம் எந்த சவாலுக்கும் அஞ்சியவர்கள் இல்லை. மக்களை வீதிக்கு இறக்கி எந்த சவாலையும் வெற்றிக்கொள்ள தயாராக இருக்கின்றோம். எனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்தன கூறியுள்ளார் .
0 comments:
Post a Comment