மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமடத்தைச் சேர்ந்த திரு திருமதி தேவராஜா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வி உசானந்தினி புஸ்பானந்தா அவர்களுக்கு சூரிச் மாநில Uster ஊஸ்ரர் மாவட்ட வைத்திய சாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவின் சத்திர சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கருவிகள் சத்திர சிகிச்சை முடிந்தபின் தோற்று நீக்கி மீள் சுழற்சி செய்து மீண்டும் அடுத்த நோயாளருக்கு சத்திர சிகிச்சைக்கு உத்தரவாதப்படுத்தி பொதி செய்யும் பிரிவின் மேலாண்மைப் பொறுப்பாளராக பதவியேற்றுள்ளார்.
சுவிஸ் நாட்டைப்
பொறுத்தவரை அரச துறைகளில் வெளிநாட்டவர்கள் உயர் பதவி வகிப்பது மிகவும் சிரமமானது அத்துடன் சிறந்த மொழித் தேர்ச்சி நிர்வாகத்திறமை மற்றும் பொதுமக்களுடன் நடந்துகொள்ளும் நடைமுறை என பல படிகளைத் தாண்டியே ஒருவர் ஒரு உயர் பதவி வகிக்கமுடியும்,அப்படி கணிசமான ஈழத்தமிழர்கள் சில பதவிகளில் இருக்கின்றனர் .
ஒந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் கொழும்பு முகத்துவாரம் இந்துக் கல்லூரியில் சாதாரண தர கல்வியையும். கொழும்பு வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரியில் உயர்தர கல்வியையும் கொழும்பு மருதானை அக்கியுனாஸ் கல்லூரியில் ஆங்கில டிப்ளோமா கல்வியையும் கற்று கொழும்பில் சில ஆண்டுகாலம் இலங்கையின் பிரபலமான சூரியன் FM வானொலியில் செய்தி அறிவிப்பாளராகவும் கடமையாற்றியவர்.
அதன் பின் கடந்த 2006 ம் ஆண்டு சுவிஸ் நாட்டிற்க்கு புலம் பெயர்ந்து வந்து தொடராக ஜெர்மன் மொழிக் கல்வியைக் கற்று சூரிச் மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள வைத்திய சாலைகளில் குறிப்பிட துறையில் சேவையாற்றி சத்திர சிகிச்சைப் பிரிவின் சத்திர சிகிச்சிக்கு பயன் படுத்தும் உபகரணங்களைக் கையாளும் அதிகாரிகளுக்கான உயர்கல்வி வசதி சுவிஸ் நாட்டில் இல்லாததால் ஜெர்மன் நாட்டில் தனது துறை சார்ந்த கல்வியை தொடர்ந்து இரண்டு முறை ஜெர்மன் நாட்டில் இடம் பெற்ற பரீட்சைகளிலும் தன்னோடு சுவிஸ் நாட்டில் இருந்து பரீட்சையில் கலந்து கொண்டவர்வர்களில் எல்லோரையும் விட சிறந்த பெறுபேறு பெற்று இப்போது இந்தப் பதவியில் இருக்கின்றார்,
இவரின் ம்ர்த்பார்வையில் பல சுவிஸ் நாட்டினர் கடமையாற்றுவதும் பெருமைக்குரிய விடயமாகும். இவரது கணவரும் சுவிஸ் Araaw அராவு மாநில சுவிஸ் மத்திய ரயில் போக்குவரத்து நிலைய தலைமைக் காரியாலயத்தில் தகவல் தொழில் நுட்ப பொறியாளராக கடமையாற்றிகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Ushananthini Puspanantha. Gruppenleiterin AEMP பெயரையும் இவரது பதவிசார்ந்த குறிப்பையும் ஊஸ்ரர் மாவட்ட வைத்திய சாலையின் நிர்வாகமே
கூகிள் தெடு பொறியில் சம்மர்ப்பித்துள்ளது என்பது நமக்கு இன்னும் பெருமை ஸ்ர்ப்பதாகும் பெருமைக்குரிய விடயமாகும், இவரது சகோதரிகளும் இதே துறையில் சூரிச் மாநில வேறு மாவட்ட வைத்திய சாலைகளில் கடமையாற்றுவதும் குறிப்பிடத் தக்கது இவரது சகோதரரும் கடந்த 41/2 வருட தகவல் தொழில் நுட்ப கல்வி முடிந்து சூரிச்மாநில தேர்வில் பொறியாளராக தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதும் பெருமைக்குரிய விடயமாகும்.
Page 2 of 2
கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட மூன்று பிரதான வீதிகளில் மறைகாணி (சி.சி.ரி.வி) பொருத்த நல்லூர் பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட திருநெல்வேலி சந்தி, கொக்குவில் புகையிரத நிலைய வீதி மற்றும் இராமசாமி பரியாரியார் சந்தி ஆகிய இடங்களில் மறைகாணி (சி.சி.ரி.வி) பொருத்துமாறு கோப்பாய் காவற்துறையினர் நல்லூர் பிரதேச சபையிடம் கோரி இருந்தனர். அதனை அடுத்தே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திகளில் வாகன நெரிசல்கள் அதிகமாக உள்ளதாகவும் , அப்பகுதிகளை அண்டிய பகுதிகளில் சட்டவிரோத செயல்கள் இடம்பெறுவதாகவும் அதனால் அப்பகுதிகளில் மறைகாணி(சி.சி.ரி.வி) பொருத்துவதன் ஊடாக அவற்றை கட்டுப்படுத்த முடியும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment