நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, July 4, 2024

கொழும்பு சென்ற பேருந்து கோர விபத்து - ஒருவர் பலி - சிலர் ஆபத்தான நிலையில் | Halawatha Colombo Main Road Accident Today


கொழும்பு சென்ற பேருந்து கோர விபத்து - ஒருவர் பலி - சிலர் ஆபத்தான நிலையில்
கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து கோர விபத்திற்கு முகங்கொடுத்த நிலையில், அதற்கு சாரதியின் செயற்பாடு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இன்று காலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 25 பேர் காயமடைந்த நிலையில் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மழை பெய்து கொண்டிருந்த போது பேருந்து சாரதியின் அதிக வேகமே விபத்திற்கு காரணமாகியுள்ளது.

இந்த விபத்தின் போது லொறியின் சாரதியும் லொறியில் பயணித்த ஏனைய இருவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

முதல் இணைப்பு

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் மாதம்பே, இரட்டைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் 25இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 9.15 மணியளவில் பேருந்தும் லொறியொன்றும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment