மருத்துவ நிர்வாகப் பரீட்சை பெறுபேறு வராத நிலையில் ஓவராக சீன் போட்டாரா அர்ச்சுனா? முரளி வல்லிபுரநாதன் கூறுவது என்ன?
சமுதாய வைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தனது பேஸ்புக் பக்கத்தில் தந்துள்ள பரபரப்பான தகவல்களை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
சிறுவயதில் இருந்தே பெற்றோர் எனக்கு கூறும் ஒரு அறிவுரை “துஷ்டர்களை கண்டால் தூர விலகு “. சில வருடங்களுக்கு முன்னர் Dr அர்ச்சனா எனக்கு முகநூலில் நட்பு அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக் கொண்டு அவரது பதிவுகளை பார்க்கும்போது அவர் மற்றவர்களையும் ஏனைய உயிரினங்களையும் துன்புறுத்துவதில் இன்பம் காண்பவர் (sadistic personality ) என்பதை அறியக்கூடியதாக இருந்தது. அதை தொடர்ந்து அவரை எனது முகநூலில் இருந்து தடை செய்துவிட்டேன் (block ).
இந்த நிலையில் இவருடைய துன்புறுத்தும் பட்டியலில் என்னையும் இணைத்துக் கொள்ள எந்தவித அவசியமும் இல்லாமல் என்னை இழுத்து பதிவிட்டு இருப்பது எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது (இணைக்கப்பட்டு உள்ளது ). இதனால் . அவருக்கு பதில் அளிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் .
அவருடைய MSc medical administration விடைத்தாள்கள் என்னுடன் சக விரிவுரையாளர்களாக மருத்துவ பட்ட பின் படிப்பு நிலையத்தில் கடமையாற்றுபவர்களினால் திருத்தப்பட்டு கொண்டிருப்பதுடன் இன்னமும் பெறுபேறுகள் வெளிவரவில்லை. இந்த நிலையில் Dr அர்ச்சனா இன்னமும் வழங்கப்படாத ஒரு பட்டத்தை தனது பெயருடன் இணைத்து போலி இறப்பர் முத்திரையை தயார் செய்து உபயோகித்து வந்தார்( ஆதாரம் இணைக்கப் பட்டுள்ளது ).
நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுபவராக தன்னை வெளிக்காட்ட விரும்பும் ஒரு மருத்துவர் எவ்வாறு மருத்துவ சபையின் மருத்துவருக்கான ஒழுக்க நெறியை மீறியும் நாட்டின் சட்டத்தை மீறியும் மக்களை ஏமாற்றும் மோசடியான போலி இறப்பர் முத்திரையை MSc Medical Administration UOC (university of Colombo ) உபயோகிக்கலாம் ?
இரண்டாவதாக மருத்துவ நிர்வாகத்தில் பாண்டித்தியம் பெற்றவராக தன்னை வெளிக்காட்டும் அவர் அரசாங்க ஸ்தாபன கோவை விதிகளை அறிந்திருக்க வேண்டும். ஸ்தாபன கோவை பதிலீடு (Acting) நியமனம் அந்தப் பதவியை பெறுவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டிருப்பவருக்கே வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாக கூறுகிறது. இலங்கையில் MSc முடிக்காத நிலையில் பதிலீடு (Acting) மருத்துவ அத்தியட்சகர் என்ற பதவியை இவர் ஸ்தாபன கோவை விதிகளுக்கு முரணாக இறப்பர் முத்திரையில் இணைத்துள்ளார் என்பது வெளிப்படை .
இந்த மோசடி செயல்களுக்கு எதிராக சிலர் கொடுத்த முறைப்பாடுகளை அடுத்து இவருக்கு எதிராக மருத்துவ சபையும் சுகாதார திணைக்களமும் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.
இந்த நிலையில் cardiff MSc தன்னிடம் இருப்பதாக புலம்பியுள்ளார். இலங்கையில் அரசாங்க திணைக்களங்களிலோ அல்லது தனியார் துறையிலோ Cardiff பட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
இந்த நிலையில் இப்போது இவர் எதிர்கொண்டுள்ள விசாரணைகளில் இவர் பொய் கூறியது நிரூபிக்கப்பட்டால் பணிநீக்கத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. அதைவிட இலங்கை மருத்துவ சபை இவருடைய உரிமத்தை (license ) ரத்து செய்து விட்டால் உலகின் எந்த பகுதியிலும் மருத்துவராக வேலை செய்ய முடியாது. விசாரணை ஓன்று நிலுவையில் இருந்தால் இலங்கை மருத்துவ சபை Good Standing Letter (நன்னடத்தைக்குரிய மருத்துவ சபை சான்றிதழ் ). வழங்காது. உலகின் எந்த மூலையிலும் மருத்துவராக வேலை எடுக்க வேண்டும் என்றால் இந்தக் கடிதம் அவசியம். இந்த உண்மை நிலையின் பாரதூரத்தை அறியாமல் தன்னிடம் plan B C D இருப்பதாக புலம்பியுள்ளார்.
நான் தற்போது மலேசியாவில் தனிப்பட்ட சில கடமைகளை நிறைவேற்றுவதற்காக வந்திருக்கும் நிலையில் இத்துடன் எனது பதிவை முடித்துக் கொள்கிறேன்.
Dr Murali Vallipuranathan
MBBS (Jaffna), FC in Ornithology, PGD (Population Studies), MSc (Colombo), MD (Community Medicine), FCCP (SL), FRSPH (UK)
Consultant Community Physician, Ministry of Health.
Visiting Lecturer, Universities of Jaffna, Peradeniya & Colombo.
0 comments:
Post a Comment