மட்டக்களப்பு மாவட்டத்தின் தளவாய் பிரதேசத்தி 100 வருடங்கள் பழமை வாய்ந்த காளிகோயிலை ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் காணி உத்தியோகத்தர் ஒருவர் பணம் கொடுத்து வாங்கியுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கும் போது
தளவாய் பிரதேசத்தி உள்ள தமிழர்களின் காணிகள் மற்றும் அரச காணிகளுக்கு வெள்ளைக் காரர்களின் ஆட்சியில் கொடுக்கப்பட்டதாக கூறி காணி உறுதிகளை கொண்டு வந்து காடுகளை அழித்தும் தமிழ் குடும்பங்களை எழுப்பியும் காணி அபகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு சுமார் 100 வருடங்கள் பழமை வாய்ந்த தளவாய் வடபத்திர காளியம்மன் கோயில் அமைந்துள்ள காணியையும் அதனை சுற்றியுள்ள சுமார் 25 ஏக்கர் காணியை தனியார் காணி என்று கூறி ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் காணி உத்தியோகத்தர் ஒருவர் வேலிபோட்டு அடைத்துள்ளார்.
இதனால் தளவாய் வடபத்திர காளியம்மன் கோயில் முஸ்லீம்களினால் சுற்றி வலைக்கப்பட்டுள்ளதாகவும் கோயில்
கோயிலை வேறு இடத்திற்கு கொண்டு செல்லுமாறும் இந்து கோயில் இருப்பதன் காரணமாக முஸ்லீம்கள் அந்த பகுதியில் வந்து குடியேற மறுத்து வருவதாகவும் காணியை வாங்கியுள்ள முஸ்லீம் நபர் ஆலய நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதே நேரம் குறித்த ஆலயம் அமைந்துள்ள பிரதேசம் பெரும் காடாக இருந்ததாகவும் அந்த காட்டுப்பகுதியில் பந்தல் அமைத்து காளியம்மனை மக்கள் வணங்கி வந்ததாகவும் பின்னர் 1951 ஆண்டுக்கு பின்னர் அந்த பகுதியில் தமிழ் மக்கள் குடியேறி வாழ்ந்து வந்ததாகவும் பின்னர் ஏற்பட்ட யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து 1994 ம் ஆண்டு முதல் மீண்டும் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் வாழ்ந்த காணிகளுக்கு அரசாங்கத்தினால் ஒப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு திடீரென குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு கச்சேரியில் கடமைபுரியும் முஸ்லீம் காணி உத்தியோகத்தர் ஒருவர் குறித்த காணியை தான் தமிழ் வைத்தியர் ஒருவரிடம் இருந்து பணம் கொடுத்து வாங்கியுள்ளதாகவும் தான் வாங்கிய காணிக்குள் காளிகோயில் அமைந்துள்ளதாகவும் கூறி கோயிலை அகற்றுமாறு கூறியிருந்தார்.
உடனடியாக நாங்கள் தமிழ் வைத்தியரை தொடர்வு கொண்டு உங்களுக்கு எப்படி இங்கு காணி வந்து அப்படி உங்களது காணியாக இருந்தால் ஏன் கோயிலையும் சேர்த்து விற்பனை செய்தீர்கள் என்று கேட்ட போது?
இது எங்களது பரம்பரை காணி இதற்கு வெள்ளைக்கார காலத்து உறுதி உண்டு என்று கூறி கோயிலுக்கு இரண்டு ஏக்கர் காணி கொடுக்கச் சொல்லி காணியை வாங்கிய முஸ்லீம் நபரிடம் தெரிவிப்பதாக கூறி காணி முழுவதையும் விற்பனை செய்துவிட்டு சென்றுவிட்டார்.
இது குறித்து பலரிடம் முறையிட்டும் யாரும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது கோயிலுக்கு முன்னாள் மீன், மாட்டிறைச்சி கழிவுகளை இரவு நேரங்களில் கொட்டுகிறார்கள் . கோயிலை இரவு நேரங்களில் இடிக்கப்போவதாக பல அநாமதேய அச்சுறுத்தல்கள் வந்துள்ளது.
அரச காணி தனியார் காணியாக மாறியது எப்படி?
கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக அரச காணியாக இருந்த இப்பிரதேசம் கடந்த 2017 ஆண்டு தனியார் காணியாக மாறியது எவ்வாறு?
பல வருடங்களாக வராத வெள்ளைக்கார உறுதி 2017 ஆம் ஆண்டு எங்கிருந்து வந்தது?
கோயிலை அண்டிய பிரதேசத்தில் வாழும் பொதுமக்களுக்கு 1951 ஆண்டு அரசாங்கம் காணி ஒப்பங்கள் வழங்கியுள்ளதுடன் 1994 ம் ஆண்டு சொர்ணபூமி காணி உறுதிகளும் வழங்கப்பட்ட காணி எவ்வாறு தனியார் காணியாக மாறியது இதற்கு பின்னாள் உள்ள இரகசியங்கள் என்ன? கச்சேரியில் உள்ள காணி உத்தியோகத்தருக்கு எங்கெல்லாம் காணிகள் உண்டு இதற்கு தமிழ் உயர் பதவிகளில் இருப்பவர்கள் உடந்தையா போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட வேண்டியவை.
இனக்கலவரத்தை தூண்டும் செயல்!
தற்போது கிழக்கில் தமிழர்களின் காணிகள் அபகரிக்கபடும் நிலையில் ஏற்கனவே தமிழர்கள் விரக்தி அடைந்து காணப்படும் நிலையில் தமிழ் மக்கள்
அவர் அதை வாங்குவதன் ஊடாக தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் இன முரண்பாடு ஏற்படும் என்று அவருக்கு தெரியாத? அவ்வாறு தெரிந்தும் அவர்கள் காணிகளை வாங்கி கோயிலை சுற்றி அடைத்து வைத்துள்ளனர் தற்போது கோயிலை சுற்றி முஸ்லீம் குடியேற்றத்தைச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு ஒரு முஸ்லீம் காணி உத்தியோகத்தர் செய்யும் செயற்பாட்டினால் தமிழ் முஸ்லிம் மக்களிடையே இன முரண்பாடு ஏற்பட்டு வன்முறைகள் உருவாக வாய்ப்பு அதிகமாக உள்ளதாக பிரதே மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment