உடல் உபாதை காரணமாக மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் குழந்தை பிரசவிக்கவுள்ளதையறிந்து, உடனடியாக அம்யூலன்ஸ் வண்டியில் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு சென்று சேர்வதற்கு முன்னரே, சிறுமிக்கு பிரசவ வலி அதிகரித்து, குழந்தையை பெற்றெடுத்தார்.
தாயும், சேயும் கிளிநொச்சி வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மல்லாவி பிரதேச சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தரின் புகாரின் அடிப்படையில், இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்த பொலிசார், சிறுமியின் உறவினர்களிடம் வாக்குமூலம் பெற்றனர். சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த வீட்டினர், சிறுமியிடம் நடத்திய விசாரணையில் நெருங்கிய உறவினராக வாலிபர் ஒருவரே தன்னை துர்நடத்தைக்குள்ளாக்கி, கர்ப்பத்திற்கு காரணமென்பதை குறிப்பிட்டதாக, உறவினர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த தகவல்களை உறுதிசெய்தார்.
இதையடுத்து, மாந்தை கிழக்கு பாண்டியன்குளத்தில் வசிக்கும் 24 வயதான வாலிபர் நேற்று கைதானார். சிறுமியின் தாய்வழி உறவினர் இவர்.
வாலிபர் நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment