கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற நான்கு வயது மகனின் தாயிற்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவை சேர்ந்தவர் சாம் ஆப்ரஹாம, இவர் தனது மனைவி சோபியா சாம் (33) மற்றும் 4 வயது மகனுடன் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசித்து வந்துள்ளனர், இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆப்ரஹாம் தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
மாரடைப்பில் ஆப்ரஹாம் இறந்துவிட்டதாக நாடகமாடிய சோபியா,
கேரளாவுக்கு சென்று சடங்குகளை செய்தார்.இந்நிலையில் பிரேத பரிசோதனையில், ஆப்ரஹாமின் உடலில் சையனைடு விஷம் கலந்திருந்தது தெரியவந்தது.பல மாதங்கள் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணையில் பத்து மாதங்கள் கழித்து சோபியா மற்றும் அவரது கள்ளக்காதலன் அருண் என்பவரும் இணைந்து கைது செய்யப்பட்டனர்.
திருமணத்துக்கு முன்னரே அருணும் சோபியாவும் காதலித்துள்ளனர் பின் சில காரணங்களால் இவர்கள் காதல் முறிந்துள்ளது இந்நிலையில் தான் சோபியா அப்ரஹாமை திருமணம் செய்துள்ளார்.மீண்டும் தன் முன்னாள் காதலனுடன் உறவை புதுப்பித்த சோபியா அருணுடன் சுற்றிவந்துள்ளார்.இதை அறிந்த ஆப்ரஹாம் சோபியாவை கண்டித்துள்ளார்
தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஆப்ரஹாமை திட்டம்போட்டு கொன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.ஆப்ரஹாம் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, ரயில்நிலையத்தில் வைத்து அருண் ஆப்ரஹாமை கொல்ல முயன்றுள்ளார்.இதில் கழுத்தில் காயங்களுடன் தப்பித்த ஆப்ரஹாம், உறவினர்களிடம் இனிமேல் கேரளா வந்தால் சவப்பெட்டியில் வரலாம் என்றும்,சோபியாவின் நடவடிக்கைகள் குறித்து கூறியும், அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிகிறது.
இந்த வழக்கு மெல்போர்ன் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், மூன்று ஆண்டுகள் கழித்து சோபியாவுக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அருணுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.ஆப்ரஹாமின் மகன், சோபியாவின் சகோதரியின் மேற்பார்வையில் விடப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment