தென்கிழக்கு அரபிக்கடல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மேலும் 100 மில்லிமீற்றர் மழை வீழச்சி எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகளவிலான மழைவீழ்ச்சி காலி மாவட்டத்தின் போதிவெல பிரதேசத்தில் 334.1 மில்லிமீற்றராக பதிவாகியுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களு மற்றும் ஜின் கங்கைகளுடன், அத்தனுகலு ஓயாவை அண்டி வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினமும் மழை எதிர்ப்பார்க்கப்படுவதனால், குறித்த கங்கைகளில் நீர்மட்டம் அதிகரிப்பது தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நிலவும் மழையுடனான காலநிலையால் களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக களனி, கொலன்னாவை, பியகமை, கடுவலை முதலான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மழையுடனான காலநிலை காரணமாக 4 பேர் மரணித்துள்ளனர்.
அவற்றுள் 3 மரணங்கள் களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே, எல்பிட்டி - உடுவில நீரோடைக்கு நீராட சென்ற 11 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, வலல்லாவிட, அகலவத்தை, மத்துகமை மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன்,
பதுளை மாவட்டத்தின் பதுளை மற்றும் பஸ்ஸர பிரதேச செயலக பகுதிகள் மற்றும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட, யடியந்தோட்டைம ற்றும் ருவான்வெல்ல ஆகிய பிரதேச செயலக பகுதிகளிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகளவிலான மழைவீழ்ச்சி காலி மாவட்டத்தின் போதிவெல பிரதேசத்தில் 334.1 மில்லிமீற்றராக பதிவாகியுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களு மற்றும் ஜின் கங்கைகளுடன், அத்தனுகலு ஓயாவை அண்டி வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினமும் மழை எதிர்ப்பார்க்கப்படுவதனால், குறித்த கங்கைகளில் நீர்மட்டம் அதிகரிப்பது தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நிலவும் மழையுடனான காலநிலையால் களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக களனி, கொலன்னாவை, பியகமை, கடுவலை முதலான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மழையுடனான காலநிலை காரணமாக 4 பேர் மரணித்துள்ளனர்.
அவற்றுள் 3 மரணங்கள் களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே, எல்பிட்டி - உடுவில நீரோடைக்கு நீராட சென்ற 11 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, வலல்லாவிட, அகலவத்தை, மத்துகமை மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன்,
0 comments:
Post a Comment