உத்ர பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்தவர் காசிம்.
இவர் அங்குள்ள அதிவேக நெடுஞ்சாலை
இதற்காக, குறித்த பிரதேச காவல்துறை அதிகாரிகளால், கிட்டத்தட்ட 6000 ரூபா பணம் செலுத்தும்படி நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.
திடீரென காவல்துறை அதிகாரிகள் அபராதம் விதித்ததும், காசிம் நிறையவே அதிர்ச்சி அடைந்துவிட்டார்.
என்னய்யா புதுக்கதையா இருக்கு ? ஈருருளியை வேகமாக செலுத்தினால் அபராதம் விதிக்கும் சட்டம் உள்ளமை தனக்கு தெரியாதே என்று, அவர் வினவியுள்ளார்.
உண்மையில் இந்தியாவில் அப்படி ஒரு சட்டம் இல்லை.
ஆனால் காவல்துறை அதிகாரிகள் ஏன் அப்படி மோசமாக நடந்தார்கள் என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது.
குறித்த காவல்துறை அதிகாரிகள், காசிம் வேகமாக ஈருருளி செலுத்தியதாக கூறி, அபராதம் விதித்து ரசீது ஒன்றை கையளித்ததுடன், அவரது ஈருருளி வண்டியில் உள்ள காற்றையும் திறந்து விட்டுள்ளனர்.
இதன்போது அந்த ரசீதை வாங்கி படித்த காசிமுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் பெண் ஒருவரின் உந்துருளி இலக்க எண்ணே இருந்துள்ளது.
இந்த நிலையில், தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து, சமூக வலைத்தளத்தில் குறித்த ரசீதை புகைப்படம் பிடித்து தன் கதையை பதிவேற்றம் செய்துள்ளார் காசிம்.
இந்த பதிவை பார்வையிட்டவர்கள் காவல்துறையினரை பெரிதும் விமர்ச்சித்து வருவது மாத்திரமின்றி, காசிமுக்கு நீதி வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment