நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 25, 2018

மாதவிடாய் கறை பட்ட மாணவிக்கு பேருந்தில் வைத்து உதவிய மாணவன்... தாயின் உருக்கமாக பதிவு..


எதிர்பாராத விதமாக மாணவி ஒருவருக்கு பேருந்தில் வைத்து மாதவிடாய் கறை ஏற்பட்டதை பின்னால் இருந்த சக மாணவர் ஒருவர் கண்டுள்ளார். இதனை அடுத்து மாணவியின் அருகே சென்ற மாணவர், இது குறித்து தெரியப்படுத்தியுள்ளார்.

அந்த செய்தியைக் கேட்ட மாணவி, செய்வதறியாது தடுமாறியுள்ளார். எனினும் குறித்த மாணவன், தனது கம்பளிப் போர்வையை கொடுத்து இடுப்புடன் சேர்த்து கட்டிக்கொண்டு பத்திரமாக செல்லுங்கள் என்றுக் கூறியுள்ளார்.

இதனை கேட்ட மாணவிக்கு சற்று தடுமாற்றமும், பயமும் ஏற்பட்டுள்ளது. எனினும் அதற்கு பதிலளித்த மாணவன், ''எனக்கும் தங்கை ஒருவர் உள்ளார். உங்கள் மன பதட்டம் புரிகிறது. எதையும் யோசிக்காமல் கம்பளிப் போர்வையைக் கட்டிக்கொண்டு பத்திரமாக வீடு செல்லுங்கள்'' எனக் கூறியுள்ளார்.

இதனை அறிந்த மாணவியின் தாய், தமது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் குறித்த மாணவருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment