புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவியேற்று, நாட்டில் அரசியல் குழப்பநிலைகள் தோன்றியுள்ள நிலையில், ஐ.தே.க அரசை ஆதரிக்கும்படி தமிழ் தேசியகூட்டமைப்பிடம் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனை தொலைபேசியில் அழைத்த ரணில், இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.இந்த தகவலை எம்.ஏ.சுமந்திரனும் உறுதிசெய்துள்ளார்.
எனினும், “உடனடியாக எம்மால் எந்த முடிவையும் எடுக்க முடியாது. இந்த குழப்பங்களை பற்றி ஆராய்ந்து வருகிறோம். நாம் எல்லோரும் ஒன்று கூடி ஆராய்ந்தே முடிவெடுக்க முடியும்“ என்றார்.
இதேவேளை, நேற்றிரவு தமிழ் பக்கத்தில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. மஹிந்த ராஜபக்ச பதவியேற்பதற்கு இரண்டு மணித்தியாலம் முன்பாக மூடிய அறைக்குள் தமிழ்தேசிய கூட்டமைப்பு பேசியது என்ன? என்ற அந்த செய்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் இன்று (27) அதிகாலையில் மறுத்துள்ளன.
“தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது உண்மை. அது வழக்கமான- முன்னரே திட்டமிடப்பட்ட- ஒரு கூட்டம். பிரதமர் மாற்றம் நிகழப்போவதை அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை. நாட்டு மக்கள் செய்திகளை பார்த்து அறிந்ததுபோலத்தான், நாங்களும் செய்திகளை பார்த்தே அறிந்து கொண்டோம்“ என்றார்கள்.
0 comments:
Post a Comment