முல்லைதீவில் மக்கள் புரட்சி!!!! மாங்குளத்திற்கு வடமாகாண சபை வர தடையாக இருந்தவர் முதலமைச்சரே இணைத்தலைவர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் தெரிவிப்பு.
22.10.2018 அன்று நடைபெற்ற மாவட்ட ஆண்டின் மூன்றாவது ஒழுங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாங்குளத்தில் வடமாகாண சபையினை நிறுவ வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பிரதேச சபை தவிசாளர் என அங்கு இருந்தவர்களுக்குள் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதில் கருத்து தெரிவித்த வன்னி எம்.பி.சி.சிவமோகன் அவர்கள் வடமாகாண சபை இங்கு வரவேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டு விட்டது என குறிப்பிட அதற்க்கு பதிலளித்தார் ஒருவர்
‘அமாம் வருவதாக கூறிவிட்டு யாழ்ப்பாணத்தில் அடுக்கு மாடி அடுக்கு மடியாக எழும்புகின்றது இங்கு எப்படி வரும் அதுதான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அறிக்கையினை கூறியுள்ளார் மாங்குளத்தில் தண்ணி இல்லையாம் அப்போ நாங்கள் தண்ணி இல்லாமலா அங்கு இருக்கின்றோம்
‘ என கூறினார் அப்போ குறுக்கிட்ட வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் நாங்களும் மாங்குளத்தில் வடமாகாண சபையானது அமைக்க பட வேண்டும் அது மட்டும் அல்ல யாழில் இருக்கும் ஒரு சில உறுப்பினர்களும் அதனை விரும்புகின்றனர் ஆனால் நிதி வசதி இல்லையாம்.
அதற்க்கு பதிலளித்தார் தவிசாளர் யாழில் கட்டிடம் அமைக்க மட்டும் எவ்வாறு நிதி வருகின்றது இவ்வாறான நொண்டி காரணத்தினை கூறவேண்டாம் என கூச்சலிட்டார்.
இதன்போது அமைதியினை பேணுமாறு கேட்ட இணைத்தலைவர் தான் மாகாண சபையில் உறுப்பினராக இருந்த வேளையில் கட்டிடத்துக்கு கிடைக்க பெற்ற இந்த நிதியினை இது மாங்குளத்தில் நிர்மாணிக்க வேண்டிய கட்டிடத்திற்கு என்று நான் இருக்கும் போதே பிரித்து வைத்தோம் அந்த நிதி போதாதா மற்றும் யாழ் நகரத்திற்கு ஒரு துணை நகரம் வேண்டும்
யாழில் நிலத்தடி நீரானது மாசுபட்டு வருகின்றது என்பது சுகாதார திணைக்களத்தினலையே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அதனால் யாழில் மாகாண சபையினை நிறுவது தவறு துணை நகரமாக மாங்குளம் வரவேண்டும் என்பதுதான் எங்களின் ஒரு ஆரோக்கியமான கருத்தாகும்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் இந்த வடமாகாண சபையினை மாங்குளத்திற்கு கொண்டுவர தடையாக இருந்தது முதலமைச்சர் கூறிய மாங்குளத்தில் தண்ணீர் இல்லை என்ற இந்த ஒரு கரணம் தான் இது முற்றிலும் தவறான கருத்து வரும் காலத்தில் வடமாகாண சபையின் முடிவின் பின்னர் கட்டாயமாக இது எங்களினால் மீண்டும் மீளாய்வுக்கு கொண்டுவரப்படும் மங்குளத்தில் மாகாண சபையினை நிறுவுவதற்கு நாங்கள் உழைப்போம் என வைத்திய கலாநிதி வன்னி எம்.பி.சி.சிவமோகன் அவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment