நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 25, 2018

அமைச்சர் மனோகணேசனின் வருகைக்காக மாணவர்களை வைத்து வீதியை துப்புரவு செய்த பாடசாலை அதிபர்!



தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோகணேசனின் வருகைக்காக கிளிநொச்சி- பூநகரி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களை வைத்து வீதியை துப்புரவு செய்தமை தொடர்பில் பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.

பூநகரி பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ வித்தியானந்தா வித்தியாலத்தில் 5 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வுக்காக இன்றைய தினம் அமைச்சர் மனோகணேசன் சென்றிருந்தார். இதற்காக பாடசாலை மாணவர்களை வைத்து பாடசாலைக்கு செல்லும் வீதி துப்புரவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மழை பெய்து கொண்டிருந்த நிலையிலும் சிறிய மாணவர்கள் பாரசாலை சீருடையுடன் நின்று வீதியை துப்புரவு செய்துள்ளார்கள். இதனை முன்னணி தொலைக்காட்சி ஒன்றின் பிராந்திய ஊடகவியலாளர் புகைப்படம் எடுத்துள்ளார். எனினும் அந்த புகைப்படத்தை வெளியிடவேண்டாம் என சிலர் ஊடகவியலாளரை கேட்டுள்ளனர்.

இருப்பினும் மாணவர்களை வைத்து வீதி துப்புரவு செய்தமை அதுவும் ஒரு அமைச்சரின் வருகைக்காக செய்தமை பாரிய பிழை என சுட்டிக்காட்டி குறித்த ஊடகவியலாளர் அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

0 comments:

Post a Comment