பிக்பாஸ் வீட்டில் ஆரம்ப நாட்களில் யாருடனும் அதிகமாக பேசிக்கொள்ளாமல் தனியாகவே இருந்த ரித்விகா தான் தவறு செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
பிரபல ரிவியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக ரித்விகா மக்களால் தெரிவு செய்யப்பட்டார். ரன்னராக மக்களின் வெறுப்பினை சம்பாதித்த ஐஸ்வர்யா வந்தார்.
ரித்விகா கூறுகையில், தனக்கு பிக்பாஸ் வீட்டில் நண்பர்களே கிடையாது. முதல் எட்டு வாரங்கள் அவ்வாறே இருந்தேன். அதன்பின்பு தான் அனைவரிடமும் பேச ஆரம்பித்தேன்.
அதுமட்டுமல்லாமல் பாலாஜி மீது குப்பை கொட்டும் தருணத்தில் தான் போய்
தடுக்காமல் இருந்தது மிகப்பெரிய தவறு என்றும், அத்தருணத்தில் பாலாஜி அண்ணா தன்னுடன் மிக நன்றாக பேசிக் கொண்டிருந்தார் என்று வருத்தப்பட்டுள்ளார்.
அதன்பின்பு பிக்பாஸ் வீட்டில் வெற்றியாளராக தமிழ்பெண் தான் வர வேண்டும் என்ற வார்த்தையினை யாரும் கூறவில்லை என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
தனது வாழ்வில் கிடைத்த முழுமையான வெற்றியே இதுவாகும்.
பிக்பாஸ் சீசன் ஒன்றில் Wild Card Entry -க்கு அழைத்த போது என்னால் செல்லமுடியாத காரணத்தால், இரண்டாவது சீசனில் நானே போன் செய்து கேட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனாலும் பிக்பாஸ் வைத்த நேர்காணலில் அதிகமாக பேசியவருக்கே முன்னிலை இருந்ததாகவும், நாம் மிக அமைதியாக இருந்ததால் கடைசி போட்டியாராகவே உள்ளே சென்றதாகவும், செல்லும் முன்பு நீங்கள் எப்படியிருப்பீர்களோ அப்படியே இருங்க அதுதான் வேண்டும் என பிக்பாஸ் கூறியே உள்ளே அனுப்பிதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment