குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியில் 12ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் அப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் மிருகத்தனமான தாக்குதலுக்கு இலக்காகி குளியாப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 18ஆம் திகதி குறித்த ஆசிரியரால் மாணவன் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஆசிரியரின் பிரத்தியேக வகுப்பிற்கு செல்லாத காரணத்தினால் தன்னுடன் அந்த ஆசிரியர் தொடர்ந்து கோபமாக இருந்து வந்ததாக பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார்.
அவரது வகுப்பிற்கு செல்லாத மாணவர்களை அவர் தாக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அந்த மாணவன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த மாணவன்,
எங்கள் மிஸ் படிப்பித்துக் கொண்டிருக்கும்போதே குறித்த ஆசிரியர் என்னைத் தாக்கினார். அதன்பின்னர் அவர்கள் என்னை குளியாப்பிட்டிய தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
அதன் பின்னர் சேர்மார், எனது நண்பர்களிடம் மீடியாவிலிருந்து யாரும் வந்து கேட்டால் ஒன்றும் கூற வேண்டாம் என கூறியுள்ளார்கள். எனக்கு வாந்தி வந்ததாகவும் ஓடும்போது விழுந்துவிட்டதாகவும் கூறுமாறு சொல்லியுள்ளார்கள்.
நான் பாடசாலையை நேசிப்பதால் பாடசாலையின் பெயர் அசிங்கமாகிவிடுமென தனியார் மருத்துவமனையிலே சிகிச்சை பெறவேண்டுமென அம்மாவிடம் கூறினேன்.
எனினும் எனது அம்மாதான் குளியாப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தார்கள் என தெரிவித்துள்ளார்.
குறித்த ஆசிரியரை கைது செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் குறிப்பிட்டனர்.
0 comments:
Post a Comment