வியட்னாம் இளம்பெண் ஒருவர், தான் தனது காதலனுக்கு எழுதிய காதல் கடிதங்கள் முதலான அந்தரங்க தகவல்களை காட்டினால்தான் அவருக்கு விசா வழங்கப்படும் என்று கிளர்க் ஒருவர் கட்டாயப்படுத்தியதாக கூறியுள்ள விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் விசா வழங்கலின்போது நடக்கும்
சுவிட்சர்லாந்திலிருக்கும் தனது காதலரை சந்திப்பதற்காக 30 நாட்களுக்கான சுற்றுலா விசா ஒன்றை பெறுவதற்காக ஒரு வியட்னாம் இளம்பெண் விண்ணப்பிக்கும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
அவருக்கு விசா கிடைத்தது, ஆனால் அதற்காக அவர் தனது காதலனுக்கு தான் அனுப்பிய காதல் கடிதங்கள், முத்த இமோஜிகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றை அவர் விசா வழங்கும் கிளர்க்கிடம் காட்டவேண்டியிருந்தது.
இந்த விடயம் வெளியில் வந்ததையடுத்து, இது ஒரு வழக்கத்திற்கு மாறான சம்பவம், அந்த தவறு உடனடியாக சரி செய்யப்பட்டது என்று ஃபெடரல் வெளியுறவு விவகாரங்கள் துறையின் செய்தி தொடர்பாளரான George Farago
விசா வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒப்பந்த அடிப்படையிலான ஒரு அலுவலகத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
சுவிஸ் தூதரகங்களின் வேலைப்பளுவை குறைப்பதற்காக இதுபோல் உலகம் முழுவதும் 60 அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. என்றாலும் தரமாகவும் வெளிப்படையாகவும் விசா வழங்கல் குறித்த பணிகள் நடைபெறுகின்றனவா என்பதை சுவிஸ் அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.
0 comments:
Post a Comment