யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் சிலரின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
நீண்ட போராடத்தின் பின்னர் வலையில் சிக்கிய மீன்களை மீண்டும் கடலில் விடுவிப்பதற்கு மீனவர்கள் சிலர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பெரிய அளவிலான மீன் ஒன்றை மீனவர்கள் பிடித்தால் அதனை மீண்டும் கடலில் விடுவதென்பது அரிதான விடயமாகும்.
எனினும் இந்த மீனவர்கள் வலையில் சிக்கிய குறித்த மீன் இனத்தை உணவிற்கு பெற்றுக் கொள்ளாததன் காரணத்தினால் மீண்டும் கடலில் விடுவித்துள்ளனர்.
பொதுவாக பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற மீன்களை பிடித்தால் அதனை கண்டுகொள்ளாமல் மீனவர்கள் விட்டு விடுவார்கள்.
எனினும் அவ்வாறான மீன்கள் உயிர் வாழ வேண்டும் என நினைத்து மீனவர் கடலில் விடுத்துள்ளனர். இந்த மனிதாபிமானமிக்க நடவடிக்கை குறித்த பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment