தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 14ஆம் தேதி
அம்ருதாவும் பிரணாயும் ஒருவரைஒருவர் விரும்பி காதல் திருமணம் செய்துகொண்டதற்காக அமிர்தாவின் தந்தை மாருதிராவ் கூலி கும்பலை வைத்து ஆணவப்படுகொலையை செய்துள்ளார்.
தற்போது மாத கர்ப்பிணியாக இருக்கும் அம்ருதா, தனது கணவனின் இறப்பிற்கு நியாயம் கிடைக்க போராடுவேன் என்று முடிவு செய்து தனது மாமியார் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அம்ருதாவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் கட்சியின் சார்பில் ரூபாய் ஐம்பதாயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.
தமிழகத்தில் கவுசல்யா என்ற இளம்பெண் தனது கணவர் சங்கரை ஆணவப்படுகொலை செய்த பெற்றோருக்கு எதிராக போராடி வெற்றிகண்டதை போல நீயும் துணிச்சலாக போராடி வெற்றி பெற வேண்டும் என்று திருமாவளவன் அம்ருதாவை ஊக்கமூட்டினார்.
பிரணாய் பெற்றோரிடம் அமிர்தாவை
தன்னுடைய கணவர் கொல்லப்பட்டதற்கு நீதி கிடைக்கும் வரையில் போராடபோவதாகவும், சாதி என்ற விடயத்திற்காக இவ்வளவு பெரிய கொடுமையை செய்திருக்கிறார்கள் என்றும், இதுவே கடைசியாக இருக்க வேண்டும், இத்தகைய ஆணவக் கொலைகளை தடுக்க பிரணாயின் பெயரிலேயே சட்டம் இயற்ற வேண்டும் என்றும் உறுதியாக நின்று போராட இருப்பதாகவும் சந்திப்பின் போது அம்ருதா தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment