இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று, தாம் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின ருக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டதாக கூறியுள்ளார், நீதியமைச்சர் தலதா அத்துகோரள.
கண்டியில் நேற்றுமுன்தினம் நடத்திய ஊடகச் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்குப்
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவது போன்று, அரசியல் கைதிகள் என்று யாரும் சிறைச்சாலைகளில் இல்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாக காணப்பட்டவர்களும் நீதிமன்ற விசாரணையில் இருப்பவர்களும் விசாரணைக்காக காத்திருப்பவர்களும் தான் சிறைகளில் உள்ளனர்.
தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் நடத்திய சந்திப்பின் போது, இதனை நான் தெளிவாக எடுத்துக் கூறினேன்.
தடுத்து
முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவும், சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை எனத் தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment