மீண்டும் அதிகாரத்திற்கு வந்ததும், இரண்டு வருடத்திற்குள் இனப்பிர்சனைக்கு தீர்வு காண்பேன் என அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார் மஹிந்த ராஜபக்ச. தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய
யுத்தம் முடிந்ததும் வடக்கு கிழக்கின் கட்டுமானம், தமிழர்களின் அன்றாட பிரச்சனை பற்றி கவனம் செலுத்தியிருந்தோம். அதை தொடர்ந்து தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முயன்றபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு ஒத்துழைக்கவில்லையென்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்- “இரா.சம்பந்தனை நானே அழைத்து பேசினேன். ஆனால் இணக்கமாக பேசி பிரச்சனையை தீர்க்க அவர்கள் ஆர்வமாக இருக்கவில்லை. எனது அழைப்பை உதாசீனம் செய்து நடந்து கொண்டர்.
யுத்தத்தின் பின்னர் பன்னிரண்டாயிரம் விடுதலைப்புலிகளை விடுவித்தோம். வடக்கு மாகாண ஜனநாயகபூர்வ தேர்தலை நடத்தினோம். இப்படி பல சமிக்ஞைகளை காட்டியபோதும், கூட்டமைப்பினர் அதற்கு சாதகமாக பிரதிபலிப்பை காட்டவில்லை. அதிகாரத்திலிருந்து எங்களை அகற்றும் திட்டத்திற்கே துணை போனார்கள்.
இப்பொழுது அவர்களிற்கு யதார்த்தம் புரிந்திருக்கும். கைதிகள் பிரச்சனை, காணி விடுவிப்பு, தேசிய இனப்பிரச்சனை தீர்வு எதுவுமே சரியாக நடக்கவில்லை. வெறுமனே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசால் எதுவுமே செய்ய முடியாது. இதற்கு மேல் எதுவும் நடக்காதென்பது கூட்டமைப்பிற்கு இப்போது புரிந்திருக்கும்.
இரா.சம்பந்தனிற்கு என்ன, அவர் விரும்பியபடி எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்து விட்டது. எதிர்க்கட்சி தலைவராக தேசிய பிரச்சனைகளை அவர் சரியாக கையாளவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவும் ஆக்கபூர்வமாக செயற்படவில்லை.
பாதுகாப்பு செயலாளராக இருந்த கோதாபய ராஜபக்ச அமெரிக்க ஆட்சிமுறை பற்றி நன்கு பரிச்சயமானவர்.
விரைவில் ஆட்சிமாற்றம் ஏற்படும். நாம் விரைவில் ஆட்சிக்கு வருவோம். வந்த கையோடு தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வை முன்வைப்போம். கசப்புணர்வை மறந்து ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு தமிழர்களிற்கு அழைப்பு விடுக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment