இலங்கையின் மாத்தளை லக்கல பிரதேச மக்களின் பழமையான கலாசார அங்கமான “ மகா இராவணா யக்கம” என்ற வழிபாடு நிகழ்வு ரணமுரே விகாரையில் இன்று நடைபெற்றுள்ளது.
இலங்கையை ஆண்ட மன்னன் இராவணன், பண்டார தெய்வமாக மக்களை பாதுகாத்து வருவதாக இவர்களின் நம்பிக்கை.
இதற்கு அமைய ஆயுதங்களை காணிக்கை செலுத்தி, திருவிழாவை நடத்தி கிராம மக்களுக்கு பாதுகாப்பை பெற்றுக்கொள்வது இந்த சமய வழிபாட்டின் நோக்கமாகும்.
அருளுடன் இந்த வழிபாடு நடத்தப்படுகிறது. இராவணா யக்கம என்ற இந்த வழிபாடு பரம்பரை பரம்பரையாக நடத்தப்பட்டு வருவதுடன் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது.
ரணமுரே விகாரையின் விகாராதிபதி உட்பட கிராமத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு இந்த வழிபாடுகளை ஒழுங்கு செய்திருந்தன.
லக்கல பிரதேச செயலகத்தின் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரி உட்பட அரச நிறுவனங்களின் பல அதிகாரி இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment