டுபாயில் பெண் ஒருவரிடம் தவறான முறையில் நடந்து கொண்ட இலங்கை இளைஞன் ஒருவருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரம் வீடு நோக்கி சென்ற பெண்ணின் கழுத்தை பிடித்து இழுத்து அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்த இளைஞனுக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
28 வயதான விற்பனை முகவராக செயற்பட்ட இளைஞன் கைது செய்யப்பட்ட நிலையில், சிறைத்தண்டனையின் பின்னர் அவரை நாடு கடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜுலை மாதம் 17ஆம் திகதி டுபாய் நாட்டின் Al Muraqqabat பகுதியில் பணி நிறைவடைந்து வீடு நோக்கி சென்ற பெண்ணை குறித்த இளைஞன் துரத்திச் சென்றுள்ளார்.
பின்னர் அவரின் கழுத்தை பிடித்து இழுத்துள்ளார். பெண் ஓடிச் சென்று ஒரு கட்டத்திற்குள் நுழைந்துள்ளார். அங்கும் குறித்த இளைஞன் சென்றுள்ளார்.
எனினும் அந்த பெண் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார். அத்துடன் இந்த இளைஞனின் செயலை டுபாய் நாட்டவர் ஒருவர் அவதானித்துள்ளார். இதனால் குறித்த இளைஞன் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
எனினும் அங்கிருந்த சிசிடீவி காணொளிகள் மூலம் சந்தேப நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட விசாரணையின் பின்னர் குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளமையினால் இலங்கையருக்கு 3 மாத சிறைத்தண்டைனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனையின் பின்னர் அவரை நாடு கடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment