நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, October 20, 2018

தஞ்சைப் பெரிய கோயிலில் போலி சிலைகள்! தொல்லியல் துறையினர் ஆய்வு



தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மற்றும் இந்திய தொல்லியல் துறையினர் இணைந்து சிலைகளின் தொன்மை குறித்து நேற்று மீண்டும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து காணாமல் போன மாமன்னன் ராஜராஜ சோழன், பட்டத்தரசி உலகமாதேவி ஐம்பொன் சிலைகள் குஜராத்திலிருந்து மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் அங்கிருந்த பழமையான நடராஜர் சிலை உள்ளிட்ட 10 சிலைகள் களவு போயுள்ளதாகவும் அவற்றுக்குப் பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில், கோயிலில் உள்ள 41 ஐம்பொன் சிலைகளையும் ஆய்வு செய்வதற்காகவே தொல்லியல் துறை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சிலைகளை ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் சிலைகள் மாற்றப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 4-வது முறையாக நேற்றையதினம் சிலைகளின் தொன்மை குறித்து நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கருவிகளின் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment