கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளரும் வன்னியூர் செந்தூரன் என்று அறியப்படுபவரின் மனைவியுமான நடராசா – போதநாயகி அவர்கள் திருகோணமலை கடற்கரையில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.
இத்துயர சம்பவம் தொடர்பாக சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் பல்வேறுபட்ட கருத்துக்கள் வலம்வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 22 ம் திகதி திருகோணமலை நீதிவான்
இதுவரை பொலிசாரின் விசாரணைகளில்
போதநாயகியை விடுதியில் இருந்து அளைத்து வந்ததாக கருதப்படும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் போதாவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட அன்றே பொலிசாரிடம் தனது வாக்குமூலத்தை வளங்கியுள்ளார்.
இவரின் கருத்துப்படி, போதநாயகியை கடந்த 20 ம் திகதி பிற்பகல் 2 மணியளவில் திருகோணமலை சங்கமித்த கடற்கரையில் இறங்கியதாகவும் முச்சக்கர வண்டி கட்டணமாக ஆயிரம் ரூபாவினை மாற்றி 400 ரூபா வளங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்திருந்ததாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக விசாரித்த போது கைதான இளைஞனிற்கும் இச்கொலை சம்பவத்திற்கும் சம்மந்தம் எதுவும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போதநாயகி காணாமல் போன நாளும் அதற்கு மறு நாளும் அவரின் கணவனான செந்தூரன் தனது வேலைத்தலத்திற்கு செல்லாமல் விடுமுறையில் நின்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது.
உடற்கூற்றுப் பரிசோதனையின் பிரகாரம் விரிவுரையாளர் கடந்த 20ஆம் திகதி இரவுதான் தண்ணீருக்குள் மூச்சடங்கி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பழுதடைந்ததை வைத்து சட்ட மருத்துவ அதிகாரியால் கணிப்பிடப்பட்ட நேரத்தின் அடிப்படையிலேயே அவர் இரவு உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
விரிவுரையாளர் போதநாயகியின் உயிரிழப்பு அதனைத் தொடர்ந்து அவரது கணவர் வன்னியூர் செந்தூரன் செயற்பட்ட விதம் என்பன பல்வேறு சந்தேகங்களை வரவழைத்தன. அவை தொடர்பில் ஊடகங்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தன
விடுமுறையில் நின்றவர் தனது கர்ப்பிணி மனைவியை அளைத்துவர சென்று கொலை செய்து நாடகமாடுகின்றாரா எனவும் விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளது.
இதேவேளை கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரான வவுனியா, ஆசிக்குளத்தைச் சேர்ந்த திருமதி போதநாயகி செந்துரன் (வயது-29) என்ற கர்ப்பிணி பெண் உயிரிழப்பில் சந்தேகங்கள் உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன.
எனினும் விரிவுரையாளரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, அதனைப் பொறுப்பேற்கும் போது, அவரது பெற்றோர் மகள் தற்கொலை செய்து கொண்டார் என்று அவசர வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.
அதனால் விரிவுரையாளரின் இறப்புத் தொடர்பான விசாரணைகளை முன்கொண்டு செல்வதில் பொலிஸாருக்கு சிக்கல் ஏற்பட்டது.
தற்கொலை தொடர்பில் நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதில்லை என்ற வகையில் பொலிஸார் வழக்கை முடிவுறுத்தும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் சமூக ஆர்வலர்களாலும் வவுனியா மற்றும் திருகோணமலை சட்டத்தரணிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கண்டன ஊர்வலத்தில் போதநாயகியின் தாயார் அளைத்து வரப்பட்டு, அவரின் உள்ளக் குமுறல்கள் வாக்குமூலமாக உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டன.
இதன் பின்னரே அனைத்து சமூகமும் செந்தூரனின் நயவஞ்சக புத்தியை உணர்ந்து கொண்டது.
இவ்வாறான நிலையில் தனது கர்ப்பிணி மனைவியின் பணத்தில் நக்கி தின்ற செந்தூரன் இறுதிச் சடங்கில்
மறுநாள் அவரது மனைவியின் சம்பள பணமான 98000 ரூபா பணமும் அதில் வைப்புச் செய்யப்பட்டிருந்தது. இதில் ஒரு சதம் கூட அவர் இறுதிச் சடங்கிற்கு வளங்கவில்லை.
முகநூலையும் மூடிக்கொண்டு, தொலைபேசியையும் அணைத்துக் கொண்டு பதுங்கி இருக்கும் செந்தூரனின் வாளிகள் சிலரால் போதநாயகியின் குடும்பத்துக்கு கடந்த ஒரு வார காலமாக கடும் அழுத்தங்கள் வழங்கப்படுவதுடன் சிலரால் அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பெண் விரிவுரையாளரின் உயிரிழப்புத் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ள தமக்கு அனைவரது ஆதரவும் தேவை என வவுனியா மற்றும் திருகோணமலை சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
0 comments:
Post a Comment