நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, October 14, 2018

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கட்டுப்படுத்த மத்திய வங்கி விதித்துள்ள தடை



ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கட்டுப்படுத்த அத்தியாவசியம் அல்லாத பெருட்களை இறக்குமதி செய்கின்றபோது அதற்கான பணத்தை டொலரில் செலுத்துவதை தடைசெய்ய இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி, குளிரூட்டி, சலவை இயந்திரம், வாசனை பொருட்கள் மற்றும் காலணி போன்ற பொருட்களுக்கு டொலரின் மூலம் பணம் செலுத்த இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

வணிக வங்கிகள் மற்றும் அதிகாரம் பெற்ற நிதி நிறுவனங்கள் என்பவற்றிற்கு இது தொடர்பிலான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வருடாந்தம் 22 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான, அத்தியாவசியம் அற்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

மத்திய வங்கியின் இந்த தீர்மானத்தினால் சிறு மற்றும் மத்திய பரிமான இறக்குமதியாளர்கள் பாதிக்கப்படலாம் என்றும், இதன் காரணமாக எதிர்காலத்தில் குறித்த பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடுகள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும், உள்நாட்டில் உள்ள கைத்தொழில் துறையினர் இதன்மூலம் சாதகமான நிலையை எட்டுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment