23 நாட்களாக கோமாவில் இருந்த பிரேசில் நாட்டை சேர்ந்த தாய் ஒருவர், குழந்தை பிறந்து கைகளில் வைக்கப்பட்டதும் உடனே விழித்து எழுந்துள்ள அதிசய சம்பவம் நடந்துள்ளது.
வடகிழக்கு பிரேசில் நாட்டைச் சேர்ந்த திருமதி அமண்டா டி சில்வா (28) என்பவர் 9 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது தன்னுடைய கணவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது திடீரென ஏற்பட்ட வாதத்தால் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் மூன்று குழந்தைகளுக்கு தாயான அமண்டா மற்றும் அவருடைய குழந்தையின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என மருத்துவர்கள் அஞ்சியுள்ளனர்.
23 நாட்கள் கழித்து அமண்டாவிற்கு பேறுகாலம் நெருங்கியது.
6 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தீவிரமாக கவனித்து வந்த மருத்துவர்கள், மூச்சுத்திணறலுக்கு இடையே சிரமப்பட்டு அமண்டாவின் குழந்தையை வெளியில் எடுத்தனர்.
இந்த சம்பவம் குறித்து செவிலியர் ஒருவர் கூறுகையில், குழந்தை பிறந்ததும் அமண்டா எழுந்து, சாதாரண நிலைக்கு திரும்பி விடுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் ஆவர் தன்னுடைய கையை கூட அசைக்கவில்லை.
சிறிது நேரம் கழித்து ஒரு செவிலியர் குழந்தையை தாயின் கைகளில் வைக்குமாறு கூறினார். அதன்படி நாங்களும் குழந்தையை கைகளில் வைத்து அனைத்து பிடித்தோம். அந்த சம்பவம் அப்படியே ஆச்சர்யமாக இருந்தது. அமண்டாவின் கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. அவருடைய இதய துடிப்பும் சீரான நிலைக்கு சென்றது. அவர் கோமாவில் இருந்து மீண்டெழுந்தார் என அந்த தருணத்தை விளக்கியுள்ளார்.
0 comments:
Post a Comment