இந்தியாவில் இருக்கும் மிகவும் மர்மம் நிறைந்த இடமாக சொல்லப்படும் ராஜஸ்தான் மாவட்டத்தில் இருக்கும் பாங்கர் கோட்டைக்கு ஒரு திகிலூட்டும் சுற்றுலா செல்வோம் வாருங்கள்.
பாங்கர் கோட்டை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆழ்வார் மாவட்டத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள சரிஸ்கா வனப்பகுதில் அமைந்திருக்கிறது.
இந்த பாங்கர் கோட்டை இந்தியாவில் இருக்கும் மிகவும்
திகிலான இடங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. இந்த கோட்டையில் மாலை நேரத்திற்கு பின் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த கோட்டையை பற்றிய பல அமானுஷமான கதைகள் உலாவருகின்றன.
நிழல் படகூடாது
முன்னொரு காலத்தில் பாபா பாலநாத் என்ற சந்நியாசி இந்த கோட்டையினுள் சிறு வீடு ஒன்று கட்டி வாழ்ந்து வந்ததாகவும் அவர் தன்னுடைய வீட்டை விட பெரியதொரு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு அதன் நிழல் தன் வீட்டின் மேல் விழுந்தால் இந்த மொத்த கோட்டையுமே அழிந்துவிடும் என்று சாபமிட்டதாகவும் அதனாலேயே இங்கே யாரும் வாசிக்காமல் கோட்டையை காலி செய்துவிட்டு சென்றதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.
சூனியக்காரரின் சாபம்
சின்ஹா என்ற மந்திரவாதி இக்கோட்டையில் வாழ்ந்துவந்த ரத்னாவதி என்ற இளவரசி மீது மோகம் கொண்டு அவளை மணமுடிக்க நினைத்தானாம். ஒருநாள் இளவரசி தன் தோழியருடன் வாசனை திரவியம் வாங்க சந்தைக்கு வருவதை அறிந்துகொண்ட மந்திரவாதி வாசனை திரவியதிற்கு பதிலாக சூனியத்தால் செய்த மயக்கும் திரவியத்தை மாற்றி வைத்துவிட்டானாம்.
இதை எப்படியோ அறிந்துகொண்ட இளவரசி மந்திரவாதி மாற்றி வைத்திருந்த வசிய திரவியத்தை எடுத்து அருகில் இருந்த ஒரு பெரிய உருளையான பாறை மீது வீசவே அந்த பாறை உருண்டு வந்து மந்திரவாதியை நசுக்கி கொன்றதாம்.
சாகும் தருவாயில் மந்திரவாதி இந்த பாங்கர் கோட்டையில் யாருமே இனி வாழ முடியாது என்று சபித்ததாகவும் அப்படி சபித்த சில காலத்திலேயே முகலாயர்களால் இக்கோட்டை முற்றுகையிடப்பட்டு கைப்பற்றப்பட்டதாம். அப்போது இந்த கோட்டையினுள் வாழ்ந்துவந்த அந்த இளவரசி உட்பட 10,000 பேரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
பாழடைந்த நிலையில் இருக்கும் இந்த கோட்டையினுள் இன்றும் அந்த மந்திரவாதி மற்றும் அவன் காதலித்த
இளவரசி ஆகியோரது ஆவிகள் இன்றும் இந்த கோட்டையை சுற்றி உலா வருவதாக சொல்லப்படுகிறது. பகலில் கூட இந்த கோட்டையினுள் இருக்கும் சில பகுதிகளுக்கு யாரும் நுழைய முடியாதபடி அந்த ஆவிகள் சுற்றிவருவதாகவும் சொல்லப்படுகிறது
கோட்டையினுள் என்ன இருக்கிறது?: இந்த கோட்டையின் முக்கிய நுழைவு வாயிலான 'பூத் பங்களா'(பேய்களின் வீடு) மூலம் நுழைந்தால் ஹனுமார் கோயில், கோபிநாத் கோயில், மங்கள தேவி கோயில், கணேஷ் கோயில், போன்ற பல்வேறு ஹிந்து கடவுளர்களின் கோயில்களையும், ராஜ பரம்பரையினர் வசித்த மாளிகைகள், வியாபாரிகள் வசித்த ஹவேளிக்கள் போன்றவற்றை காணலாம்
0 comments:
Post a Comment