யாழ்ப்பாணம், அச்சுவேலியில் நேற்று மாலை சந்தேகத்துக்கு இடமான எலும்பு எச்சம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டு மதில் ஓரமாக மின்கம்பம் நடுவதற்கு வீதியில் அகழப்பட்டபோதே
இது தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். தடயவியல் பொலிஸார் மற்றும் நீதிவான் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டது.
எலும்பு எச்சம் தொடர்பில் விசாரணைகளின் பின்னரே உறுதியான தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment