யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தால் இருவர் உயிரிழந்துள்ளதாக
கைதடி நுணாவில் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய சுப்பிரமணியம் கடோற்கசன் மற்றும் மீசாலை வடக்கை சேர்ந்த 96 வயதுடைய முருகன் கிருஷ்ணன் ஆகிய இருவருமே அவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
யாழில், கால நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் கடும் குளிர் காரணமாக இருவரும் உயிரிழந்துள்ளனர் என சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இதேவேளை, அண்மையிலும், யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் திடீரென ஏற்பட்ட உடல் நடுக்கம் காரணமாக உயிரிழந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment