நாமல்குமார, நாலக்க டி சில்வா, காணாமல் போன சினைப்பர், அகப்பட்டு கொண்ட இந்திய தோமஸ் (மனநோயாளி?) என பரபரப்புக் கதைகள் சிறிலங்காவின் அரசியலில் இப்போது சுற்றிச் சுழல்கின்றன.
இவர்கள் எல்லோரும் யார்? என்பதற்குரிய விபரங்கள் வெளிவர முன்னரே பரபரப்பான செய்திகள் அடுத்தடுத்துக்கிளம்பி விட்டன.
அதேபோல சிறிலங்காவின் பயங்கரவாதப் புலனாய்வுப்பிரிவு பாதுகாப்பு களஞ்சியத்தில் இருந்த, சினைப்பர் எனப்படும் குறி பார்த்துச்சுடும் துப்பாக்கியொன்று, காணாமல்போனதாக செய்திகள் வந்தன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர்,ஒட்டுசுட்டான் பகுதியில் வைத்து கிளைமோர் குண்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது அல்லவா?
அவ்வாறு
கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்களின் படி இந்த சினைப்பர் துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.
இதற்கிடையே இன்று நாமல்குமார சிறிலங்கா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்கிவிட்டு சென்றிருக்கிறார்.
அவரது குரல்மாதிரியும் இராசயன பகுப்பாய்வாளர்களால் பதிவுசெய்யப்பட்டது.
ஆக மொத்தம் தொடரும் பரபரப்புகளுக்கு இன்னமும் குறைவில்லை.
இதற்கிடையே இந்த விடயத்தில் தோமஸ் என்ற இந்திய பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பதால் வெளியரங்கம் தொடர்பான சஸ்பென்சுகளுக்கும் குறைவில்லை. ஆனால் கைதுசெய்யப்பட்ட இந்தியர் 2000 ஆம் ஆண்டில் இருந்து ஒருமனநோயாளி என கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தற்போது அறிக்கையிட்டுள்ளது.
இந்த சஸ்பென்ஸ் கதை தொகுப்பின் பின்னணி தான் என்ன?
சிறிலங்கா அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன, மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை கொல்லும் சதி முயற்சி குறித்தகதைகளில் ஆரம்பித்ததே இந்த பரபரப்புக்களின் தொகுப்பு.
இதற்கு ஆதாரமாக ஒரேயொரு தொலைபேசி உரையாடல் இருந்தது.
இந்த தொலைபேசிஉரையாடலை வெளியிட்டவரும் நாமல்குமாரதான்.
அதன் பின்னரே நாமல்குமாரவா? யார் அது என்பதாக தலைகள் உயர்ந்தன.
சிறிலங்காவின ்பயங்கரவாத தடுப்புப்பிரிவின் பிரதி காவற்துறை மா அதிபர் நாலக்கடி சில்வாவுடன் இந்த தொலைபேசி உரையாடல் நடத்தப்பட்டதாக நாமல்குமார குறிப்பிட்டிருந்தார்.
இதன் பின்னர் தான் நாமல்குமார என்பவருடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் தோமஸ் என்ற இந்தியர் கைது செய்யப்பட்டிருந்தார்.இவர் கேரளாவை சேர்ந்த மலையாளி.தற்போது அவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாமல்குமார வெளிப்படுத்தும் தகவல்களின் படி சிறிலங்காகுற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி நாலக்கடி சில்வா கடந்த காலங்களில் பல விடயங்களை தன்னுடன் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் காவற்துறை மா அதிபர்தான் தனக்கு நாலக்க சில்வாவை அறிமுகப்படுத்தியதாக அவர் கூறினார்
நாமல்குமார கூறிய முக்கிய தகவல்கள் இவைதான்.
2020 இல் மைத்திரியும் கோத்தபாய ராஜபக்சவும் அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்கப் போவதால்
2020 ஆண்டு நெருங்கும் போது, பாதாள உலக கும்பலில் உள்ள மாகந்துரே மதுஷ் என்ற வாடகை கொலையாளியை பயன்படுத்தி, முடிந்ததை செய்யுங்கள் என அதிகாரி நாலக்கடி சில்வா தனக்குக் கூறியதாக நாமல்குமார கூறினார்.
முடிந்ததை செய்ய வேண்டியது சரி! என்ன செய்யவேண்டும் என தான் அப்போது வினவிய போது எது வேண்டுமானாலும் செய்யுங்கள் என அவர் கூறியதாகவும் அவர் குறிப்பிடுகிறார்
மாகந்துரே மதுஷ் எனபவருக்கும் கோட்டாபயாவுக்கும் இடையே பிரச்சினை இருக்கிறது.
அதே போலவே போதைப்
பொருள் விற்பனைக்கு எதிராக மைத்திரி குரல் கொடுப்பதால் அவர் மீதும் மாகந்துரே மதுசுக்கு கோபம் இருப்பதால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் என மைத்திரியையும் கோத்தபாயவையும் கொல்லும் வகையில் அந்ததிட்டம் இருந்ததாக கூறப்பட்டது.
#கிழக்கில்_மட்டக்களப்பு_அல்லது_அம்பாறை_பிரதேசத்துக்கு_மைத்திரி_செல்லும்போது_தாக்கி_விட்டு #அதற்குரியபழியை_கிழக்கு_அரசியல்வாதி_ஒருவர்_மீது_சுமத்தும்_திட்டம்_இருப்பதாக_நாலகசில்வா_தனக்குக் #கூறியதாக_நாமல்குமார_சொல்கிறார்.
ஆனால் நாமல்குமார என்பவர் யாரென்பதே தெரியாது என நாலக சில்வா கூறுகிறார். இதற்குள் கைதுசெய்யப்பட்ட தோமஸ் என்ற இந்தியருக்கும் இந்த சதி முயற்சிக்கும்( அவ்வாறு ஒன்று இருந்தால்) என்ன தொடர்பு என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை ஆனால் ராஜபக்ச குடும்பத்தை குறிவைக்கும் திட்டம் தோமஸிடம் இருந்தாக முன்னர் குறிப்பிடப்பட்ட நிலையில் அவர் ஒரு மனநோயாளி என இந்திய தூதரகம் தற்போது கூறிவிட்டது.
ஆக மொத்தம் நாமல்குமார, நாலக சில்வா, சினைப்பர் துப்பாக்கி ,மலையாள தோமஸ் என இடியப்பச்சிக்கல் பரபரப்பாக தொடர்கிறது இந்த சதி-ராட்டம்.
0 comments:
Post a Comment