இந்தோனேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து சுனாமி என அடுத்தடுத்து இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், 10 கி.மீ. ஆழத்தில், உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து 1.5 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலை ஏற்பட்டது. இப்பேரழிவு காரணமாக உயிரிழந்தவர்களின்
சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவுக்கு 1 மில்லியன் டாலர் நிவராண உதவிகளை கூகிள் நிறுவனம் நிவாரண நிதியாக அளித்துள்ளது.
இதுகுறித்து சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் பதிவில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் ப்ளிழ்யான மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். மேலும் இந்தோனேசியா நிவாரண உதவிகளுக்காக தங்கள் நிறுவனம் சார்பில் ஒரு மில்லியன் டாலர் நிவாரண உதவி வழங்கியுள்ளது என்றார்.
மேலும் கூகிள் நிறுவனம் சார்பில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் எஸ்ஒஎஸ் அலர்ட் அந்த பகுதிக்கு அமல்படுத்தியுள்ளது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பேரழிவு காரணமாக 24 கோடி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 61 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று
சுனாமி மற்றும் நிலநடுக்கத்திற்குப் பின்னர் இந்தோனேசியாவில் இன்று ஒரு மணி நேரத்தில் இரண்டாவது எரிமலை வெடிப்பு ஏற்பட்டத்து. நேற்று வெடிப்பு ஏற்பட்டது, மணல் மற்றும் சாம்பல்லை உமிழ்ந்து வருகிறது.
இந்நிலையில், அதிகளவிலான நிலநடுக்கும், எரிமலை மற்றும் சுனாமி தாக்குதல் நடைபெறும் பகுதியாக இந்தோனேசியா திகழ்கிறது. இங்கு ஆண்டொன்றுக்கு மட்டும் சுமார் 7 ஆயிரம் நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment