சனிக்கிழமை காலை, பிரான்சின் பிரபல சுற்றுலாத்தலமான ஈபிள் கோபுரத்தின் அடியில் ஐந்து சவப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Panic Over Coffins Near Eiffel Tower
ஈபிள் கோபுரத்தின் அருகே சவப்பெட்டிகள்
சனிக்கிழமை காலை சுமார் 9.00 மணியளவில், யாரோ மூன்று பேர், பிரெஞ்சுக் கொடி சுற்றப்பட்ட ஐந்து சவப்பெட்டிகளைக் கொண்டு பாரீஸிலுள்ள ஈபிள் கோபுரத்தின் அடியில் வைத்துச் சென்றுள்ளார்கள். அந்த பெட்டிகளுக்குள் ஜிப்ஸம் என்னும் ரசாயனம் இருந்துள்ளது.
அந்தப் பெட்டிகளின் மீது, ‘உக்ரைனிலிருக்கும் பிரான்ஸ் நாட்டு வீரர்கள்’ என எழுதப்பட்டிருந்திருக்கிறது. இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதன் பின்னணியில் வெளிநாடு ஒன்று, குறிப்பாக, ரஷ்யா இருக்கலாம் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.
சமீபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உக்ரைனுக்கு பிரான்ஸ் போர்வீரர்களை அனுப்புவது தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் அவரது ஐரோப்பிய கூட்டாளிகளையே அதிர்ச்சியடைய வைத்தது நினைவிருக்கலாம். அதை ரஷ்யாவும் கடுமையாக விமர்சித்திருந்தது.
மூன்று பேர் கைது
அந்த சவப்பெட்டிகளை வேன் ஒன்றில் கொண்டுவந்து இறக்கிய பல்கேரிய நாட்டவரான ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர், சவப்பெட்டிகளைக் கொண்டு இறக்க தனக்கு 40 யூரோக்கள் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அத்துடன், அவர் இரண்டுபேர் தன்னுடன் அந்த வேனில் பயணித்ததாகவும் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, பெர்லினுக்கு ரயிலில் தப்பிச் செல்ல முயன்ற அந்த இரண்டு பேரையும் பொலிசார் மடக்கிப் பிடித்தார்கள். அவர்களில் ஒருவர் உக்ரைனியர், மற்றொருவர் ஜேர்மானியர். அவர்கள் மூன்று பேரும் பொலிஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
0 comments:
Post a Comment