நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, June 3, 2024

இந்தியாவில் துயரம்: 33 தேர்தல் அதிகாரிகள் உயிரிழப்பு | 33 Election Officials Have Died In India


இந்தியாவில் துயரம்: 33 தேர்தல் அதிகாரிகள் உயிரிழப்பு
இந்திய (india) பொதுத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 33 தேர்தல் அலுவலர்கள் கடும் வெப்பம் காரணமாக வாக்களிப்பு நிலையங்களிலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து இறப்புகள் பதிவாகியுள்ளன.

தற்போது இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்கள் கடும் வெப்பத்தில் தத்தளித்து வருகின்றன. சில மாநிலங்கள் மற்றும் நகரங்களில் வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. '

வருத்தமாக இருக்கிறது

உண்மையில் வருத்தமாக இருக்கிறது. தேர்தல் நடவடிக்கைகளின் வெற்றிக்காக தங்களை அர்ப்பணித்த 33 அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக உத்தரபிரதேச மாநில தலைமை தேர்தல் ஆணையராக உள்ள நவ்தீப் ரின்வா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

33 Election Officials Have Died In India

மேலும் உயிரிழந்த அதிகாரி ஒருவருக்கு இந்திய அரசு 1.5 மில்லியன் இந்திய ரூபாய் இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளதாக நவ்தீப் ரின்வா ஊடகங்கள் முன் விளக்கமளித்துள்ளார்.

வெப்பமான காலநிலையால் உயிரிழந்த 

இந்த நாட்களில் இந்தியாவை பாதித்துள்ள கடும் வெப்பமான காலநிலையால் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 58 என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து இறப்புகள் பதிவாகியுள்ளன.

7 கட்டங்களின் கீழ் 44 நாட்கள் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தல் நேற்று (2) முடிவடைந்தது. ஒரு மில்லியன் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு 15 மில்லியன் தேர்தல் அலுவலர்கள் தங்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வாக்கு எண்ணிக்கை நாளை (4) காலை 8.30 மணிக்கு தொடங்கி, அதிகாரபூர்வ முடிவுகள் நாளை (4) இரவு அல்லது நாளை மறுதினம் (5) காலை வெளியாகும். 

0 comments:

Post a Comment