அப்துல் கலாம்
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும், இளைஞர்களுக்கு ஊக்க சக்தியாக விளங்கியவர் எனக் கருதப்படுவார் அப்துல் கலாம்.
தமிழகத்தின் தெற்கே இராமேஸ்வரத்தில் 1931 இல் பிறந்த அவர் இந்திய ஏவுகணைத் திட்டத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
இந்தியாவின் அணுத்திட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக நாட்டின் அதியுயர் விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
2002ஆம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்ட அவர் ஐந்தாண்டுகள் அந்தப் பதவியில் இருந்தார்.
பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்குச் சென்று, எதிர்கால இந்தியாவை உருவாக்குவது தொடர்பில் இளைஞர்களிடம் உரையாற்றி வந்தார். மேலும் குழந்தைகள் மீது அளப்பரிய அன்பை செலுதியவர்.
மேலும் அப்துல் கலாமுக்கு சமூக ஆர்வலர் கோவில் கட்டி வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்து வழிபாடு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அன்னை தெரசா
ஒரு பெண், தன்னுடைய பன்னிரண்டு வயதில் துறவறம் புக முடிவு செய்து, பதினெட்டாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி, தான் என்று இல்லாது, இந்த உலகத்தையே தன்னுடைய குடும்பமாய் பாவித்து, சக மனிதர்களின் வாழ்க்கை மேம்பட தன்னுடைய இறுதி நாள் வரை போராடிக்கொண்டே இருந்திருக்கிறார் என்றால் அது “அன்னை தெரசா”வை தவிர வேறு யாராக இருக்க முடியும்.
ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயரவும், எய்ட்ஸ், தொழுநோயாளிகள், காச நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தன்னுடைய இறுதி மூச்சு உள்ளவரை உழைத்திருக்கிறார்.
மேலும் இவர் இந்தியாவில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதற்காகவே இந்தியா வந்தவர்.
இந்நிலையில் இந்த இரு முக்கிய நபர்களின் புகைப்படங்களையும் சாமி புகைப்படத்திற்கு அருகில் வைத்து வழிபடுவது மதிக்கதக்க விடயமாகும்.
0 comments:
Post a Comment